சென்னையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

சென்னையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்
சென்னையில் தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்: மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார்

சென்னை: சென்​னை​யில் தெரு​நாய்​கள் தொல்​லையை கட்​டுப்​படுத்த வேண்​டும் என்று மாநக​ராட்சி மன்ற கூட்​டத்​தில் கவுன்சிலர்​கள் புகார் தெரி​வித்​துள்​ளனர். சென்னை மாநக​ராட்சி மாமன்​றக் கூட்​டம் மேயர் ஆர்​.பிரியா தலை​மை​யில், துணை மேயர் மு.மகேஷ்கு​மார், ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்​னிலை​யில் நேற்று நடை​பெற்​றது. இதில் பங்​கேற்ற திமுக கவுன்​சிலர்​கள் `ஓரணி​யில் தமிழ்​நாடு' என்ற பேட்ஜ் அணிந்து வந்​திருந்​தனர்.

கூட்​டத்​தில் பேசிய கவுன்​சிலர்​கள் பலர், ``சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள சாலைகளில் தெரு​நாய்​களின் தொல்லை அதி​கரித்து வரு​கிறது. ரிப்​பன் மாளிகை வளாகத்​திலேயே ஏராள​மான நாய்​கள் உள்​ளன. இவை பொது​மக்​களுக்கு பெரிய அச்​சுறுத்​தலாக உள்​ளன.

அவற்​றைக் கட்​டுப்​படுத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும்'' என்று தெரி​வித்​தனர். இதற்கு பதில் அளித்த மேயர், ``சென்னை சாலைகளில் சுற்​றும் தெரு நாய்​களை பிடித்​து, இனக்​கட்​டுப்​பாடு செய்து வரு​கிறோம். ஒரு நாளில் 85 நாய்​களுக்​கு​தான் இனக்​கட்​டுப்​பாடு செய்ய முடி​யும்.

அவற்​றுக்கு வெறி நோய் தடுப்​பூசி​யும் போடப்​படு​கிறது. இனக்​கட்​டுப்​பாடு செய்த பிறகு, அவற்​றுக்கு மைக்ரோ சிப் பொருத்தி கண்​காணிக்க நடவடிக்கை எடுத்து வரு​கிறோம்'' என்​றார். தொடர்ந்து பேசிய கவுன்​சிலர்​கள், ``தெரு நாய்​களைப் பிடித்து இனக்​கட்​டுப்​பாடு செய்​வது மட்​டும் தீர்​வா​காது'' என்​றனர்.

பின்​னர் இக்​கூட்​டத்​தில் நிறைவேற்​றப்​பட்ட தீர்​மானங்​கள்: மாநக​ராட்சி கவுன்​சிலர்​கள் 200 பேர் ரூ.4 லட்​சம் செல​வில் முழு உடல் பரிசோதனை செய்​து​கொள்ள மாநக​ராட்சி மேயர் ஆர்​.பிரியா நிர்​வாக அனு​மதி அளித்​ததற்கு மாமன்​றக் கூட்​டத்​தில் ஒப்​புதல் அளித்து தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

எதிர்​வரும் வடகிழக்கு பரு​வ​மழையை முன்​னிட்​டு, பெரு​மழை​யால் தாழ்​வான பகு​தி​களில் ஏற்​படும் வெள்ள பாதிப்பை சீர்​செய்ய அனைத்து மண்​டலங்​களி​லும் பயன்​படுத்த 150 ராட்சத மோட்​டார் பம்​பு​கள், டிராக்​டர் மூலம் இயங்​கும் 477 நீர் இறைக்​கும் இயந்​திரங்​களை வாடகை அடிப்​படை​யில் பயன்​படுத்​த​வும், மணலி மண்​டலம், 17-வது வார்​டு, கொசப்​பூர்பகு​தி, தியாகி விசுவ​நாத​தாஸ் நகரில் அமைந்​துள்ள பூங்கா​வுக்கு `முத்​தமிழ் அறிஞர் கலைஞர் பூங்​கா' என பெயர் சூட்​ட​வும் மாமன்​றத்​தில் அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

மறைந்த நடிகர் ஜெய்​சங்​கர் வசித்துவந்த, தேனாம்​பேட்டை மண்​டலம், 111-வது வார்​டு, கல்​லூரி பாதையை, `ஜெய்​சங்​கர் சாலை' எனப் பெயர் மாற்​றம் செய்ய அரசின் ஒப்​புதலைப் பெற அனு​மதி அளித்​தும், டாக்​டர் ராதாகிருஷ்ணன் சாலை மற்​றும் காம​ராஜ் சாலை​யில் ஏற்​படும் போக்​கு​வரத்து நெரிசலைத் தவிர்க்க, அச்​சாலைகளை ரூ.19 கோடி​யில் அகலப்​படுத்​த​வும், தனி வழிச் சாலை அமைக்​க​வும் அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது.

பேசின் பாலம் சாலை, வேப்​பேரி நெடுஞ்​சாலை, அண்​ணாநகர் 6-வது நிழற்​சாலை, சி.​வி.​ராமன் சாலை, ஜி.என்.செட்டி சாலை, பி.எஸ்​.கு​மாரசு​வாமி ராஜா சாலை, வேளச்​சேரி பிர​தானசாலை உள்​ளிட்ட 23 பேருந்து தட சாலை​யில் ரூ.28.80 கோடி​யில் நடை​பாதைகள் அமைக்​க​வும், ரிப்​பன் மாளி​கை​யில் ரூ.1 கோடி​யில் 15 பேர் செல்​லக்​கூடிய பெரிய மின்​தூக்கி அமைக்​க​வும், வானிலை நில​வரங்​களை கண்​காணிக்க 75 இடங்​களில் சுற்​றுச்​சூழல் சென்​சார்​களை நிறு​வ​வும் அனு​மதி அளிக்​கப்​பட்​டுள்​ளது. நேற்​றைய கூட்​டத்​தில்​ மொத்​தம்​ 117 தீர்​மானங்​கள்​ நிறைவேற்​றப்​பட்​டன.