நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்டத்தில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை: நீதிமன்றம் சொல்வது என்ன?

நலம் காக்​கும் ஸ்டா​லின்’ திட்டத்தில் ஸ்டாலின் பெயரை பயன்படுத்த தடை: நீதிமன்றம் சொல்வது என்ன?
நலம் காக்கும் ஸ்டாலின்

சென்னை: தமிழக அரசு சார்​பில் ஏற்​கெனவே தொடங்​கப்​பட்​டுள்ள “உங்​களு​டன் ஸ்டா​லின்’ மற்​றும் இன்று (ஆக.2) புதி​தாக தொடங்​கப்​பட​வுள்ள ‘நலம் காக்​கும் மருத்​து​வம்’ போன்ற அரசின் திட்​டங்​களில் ‘உயிருடன் வாழும்’ அரசி​யல் தலை​வர்​களின் பெயர்​களை பயன்​படுத்த தடை விதிக்​கக்​கோரி அதி​முக எம்​.பி. சி.​வி.சண்​முகம் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்​.எம்​.வஸ்​தவா மற்​றும் நீதிபதி சுந்​தர் மோகன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு பிறப்பித்த உத்தரவு: உச்ச நீதி​மன்ற உத்​தர​வு​களின்​படி அரசு சார்​பில் ஏற்​கெனவே தொடங்​கப்​பட்​டுள்ள திட்​டங்​கள் மற்​றும் புதிதாக தொடங்​கப்​பட​வுள்ள திட்​டங்​களில் தமிழக முதல்​வரின் புகைப்​படத்தை மட்​டும் பயன்​படுத்​திக் கொள்​ளலாம். ஆனால் உயிருடன் வாழும் அரசி​யல் தலை​வர்​களின் பெயர்​களை அரசி்ன் திட்​டங்​களில் பயன்​படுத்​தக் கூடாது.

எனவே தமிழக அரசின் திட்​டங்​களில் இடம்​பெற்​றுள்ள முதல்​வரின் பெயரை நீக்க வேண்​டும். அதே​போல அரசின் திட்​டங்​கள் மற்​றும் அதுதொடர்​பான விளம்​பரங்​களில் இடம்​பெற்​றுள்ள திமுக சித்​தாந்த தலை​வர்​களான கருணாநி​தி, அண்​ணா, பெரி​யார் ஆகியோரது பெயர்​களையோ அல்​லது புகைப்​படங்​களையோ பயன்​படுத்​தக் கூடாது.

அதே​போல அரசி்ன் திட்​டங்​களில் ஆளுங்​கட்​சி​யின் சின்​னம் மற்​றும் கொடியையோ, பெயரையோ பயன்​படுத்​தக் கூடாது. அவ்வாறு பயன்​படுத்​து​வது உச்ச நீதி​மன்ற தீர்ப்​பு​களுக்​கும், தேர்​தல் ஆணைய உத்​தர​வு​களுக்​கும் முரணானது. ஆனால் தமிழக அரசு புதி​தாக தொடங்​க​வுள்ள திட்​டங்​கள் மற்​றும் ஏற்​கெனவே தொடங்கி செயல்​பாட்​டில் உள்ள திட்​டங்​களுக்கு எதி​ராக நாங்​கள் எந்​தவொரு உத்​தர​வை​யும் பிறப்​பிக்​க​வில்​லை. இவ்​வாறு உத்​தர​விட்​டுள்​ளனர்.

உயர் நீதி​மன்​றத்​தின் இந்த உத்​தரவு தொடர்​பாக சில விளக்​கம் தேவை எனக்​கோரி அரசு தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் தலைமை நீதிபதி அமர்​வில் முறை​யீடு செய்​தார். அதையடுத்து நீதிப​தி​கள், இது தொடர்​பாக விளக்​கம் கோரி மனுத்​தாக்​கல் செய்​தால் முறை​யாக விசா​ரிக்​கப்​படும் எனக் கூறி​யுள்​ளனர்.

இதைதொடர்ந்து, தமிழக அரசு தரப்​பில் உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டுள்ள விளக்​கம் கோரும் மனு: தமிழகத்​தி்ல் சில மாதங்​களுக்கு முன்​பாக அரசின் பல்​வேறு சேவை​கள் இல்​லங்​கள் தேடிச்​செல்​லும் வகை​யில் ‘உங்​களு​டன் ஸ்டா​லின்’ என்ற திட்​டம் தொடங்​கப்​பட்டு திறம்பட செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

தற்​போது ஆக.2 (இன்​று) ‘நலம் காக்​கும் ஸ்டா​லின் என்ற பெயரில் மருத்​துவ முகாம்​களை தொடங்க திட்​ட​மிட்டு அதற்​கான பணி​கள் தமிழகம் முழு​வதும் ஏற்​கெனவே செய்​யப்​பட்​டு​விட்டது.

கடைசி நேரத்​தில் அந்த திட்​டத்​துக்​கான பெயர்​களை மாற்​று​வது என்​பது இயலாத ஒன்​று. இதனால் முகாம் தள்ளிப்போவதால் மக்கள் நலன் பாதிக்கப்படும். மேலும் உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வில், ‘வாழும் அரசி​யல் தலை​வர்​களின் பெயர்​களை’ அரசின் திட்​டங்​களில் பயன்​படுத்​தக்​கூ​டாது என உள்​ளது.

நேரடி​யாக முதல்​வரின் பெயரை பயன்​படுத்​தக்​கூ​டாது என உத்​தர​வில் இல்லை என்​ப​தால் அந்த வரையறைக்​குள் முதல்​வர் வருவாரா என்​பது தொடர்​பாக​வும் விளக்​கம் தேவைப்​படு​கிறது. இவ்வாறு அந்த மனுவில் தெரி​விக்கப்பட்டுள்ளது. இந்த மனு வரும் ஆக.4 அன்​று வி​சா​ரணைக்​கு வரவுள்​ளது.