மெட்ரோவில் புகையிலை பொருட்களை பயன்படுத்த தடை: மீறினால் அபராதம்

மெட்ரோவில் புகையிலை பொருட்களை பயன்படுத்த தடை: மீறினால் அபராதம்
மெட்ரோ ரயில்களில் புகையிலைக்கு தடை மீறினால் அபதாரம்

சென்னை: மெட்ரோ ரயில்​கள் மற்​றும் மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் மெல்​லக்​கூடிய புகை​யிலை பொருட்​கள் பயன்படுத்ததடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. மீறி பயன்​படுத்​தி​னால், மெட்ரோ ரயில்வே சட்​டத்​தின் கீழ், ரூ.500 அபராதம் விதிக்​கப்​படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

சென்​னை​யில், 2 வழித் தடங்​களில் 54 கி.மீ. தொலை​வுக்கு மெட்ரோ ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. இந்த ரயில்​களில் தினசரி 3 லட்​சம் பேர் பயணம் மேற்​கொண்டு வரு​கின்​றனர். மெட்ரோ ரயில்​கள் மற்​றும் மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் நாள்​தோறும் தூய்மை​யாக வைத்​திருக்க தீவிர நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது.

இதற்​கிடை​யில், மெட்ரோ ரயில்​கள் மற்​றும் மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் மெல்​லக் கூடிய புகை​யிலை பொருட்​களை சிலர் பயன்​படுத்​துகின்​றனர். இதன் விளை​வாக, எச்​சில் துப்​புவது, ஆங்​காங்கே புகை​யிலை குப்​பைகள் கொட்​டு​வது போன்ற சுகா​தா​ரமற்ற நிலை காணப்​படு​கின்​றன. இது தொடர்​பாக புகார்​கள் வந்​தன.

இதை கருத்​தில் கொண்​டு, மெட்ரோ ரயில்​கள் மற்​றும் மெட்ரோ ரயில் நிலை​யங்​களில் மெல்​லக் கூடிய புகை​யிலை பொருட்​கள் பயன்​படுத்த தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. மீறி பயன்​படுத்​தி​னால், அபராதம் விதிக்​கப்​படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது.

இதுகுறித்​து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் கூறிய​தாவது: புகை​யிலையை உட்​கொள்​வது உடல்​நலத்துக்குமிகவும் தீங்கு விளை​விப்​பதுடன், பொது இடங்​களில் சுகா​தார சீர்​கேட்​டை​யும் ஏற்​படுத்​துகிறது. மெட்ரோ ரயில்​கள் மற்றும் நிலை​யங்​களில் தூய்​மை, சுகா​தா​ரத்தை பராமரிக்க பல்​வேறு நடவடிக்கை எடுக்​கப்​படு​கிறது.

ரயில் நிலை​யங்​கள், மெட்ரோ ரயில்​களுக்கு உள்​ளே​யும் தீவிர கண்​காணிப்பு மேற்​கொள்​ளப்​படும். மெல்​லக் கூடிய புகை​யிலைப் பொருட்​களை மெட்​டல் டிடெக்​டர்​கள் மூலம் கண்​டறிய முடி​யாத​தால், நெரிசல் இல்​லாத நேரங்​களில் ரோந்​துப் பணி​கள் தீவிரப்​படுத்​தப்​படும். இதுத​விர, பயணி​களின் நடவடிக்​கைகளை நடைமேடை பாது​காப்​புப் பணி​யாளர்​கள் உன்​னிப்​பாகக் கண்காணிக்க அறி​வுறுத் தப்​பட்​டுள்​ளனர்.

ரூ.500 அபராதம்:​ தூய்மை மற்​றும் நடத்தை விதி​முறை​களை மீறும் பயணி​களுக்கு மெட்ரோ ரயில்வே (செயல்பாடு மற்​றும் பராமரிப்​பு) சட்​டம் மற்​றும் மெட்ரோ ரயில்வே கேரஜ் மற்​றும் டிக்​கெட் வி​தி​கள் சட்​டத்​தின் கீழ், ரூ.500 அபராதம்​ வி​திக்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.