வேளச்சேரி தடத்தை மெட்ரோவுடன் இணைக்க ரயில்வே வாரியம் கொள்கை ரீதியில் ஒப்புதல்

வேளச்சேரி தடத்தை மெட்ரோவுடன் இணைக்க ரயில்வே வாரியம் கொள்கை ரீதியில் ஒப்புதல்
வேளச்சேரி தடத்தை மெட்ரோவுடன் இணைக்க ரயில்வே வாரியம் கொள்கை ரீதியில் ஒப்புதல்

சென்னை: தெற்கு ரயில்​வே​யிடம் இருக்​கும் கடற்​கரை – வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்​தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்​துடன் இணைக்க கொள்​கைரீ​தியி​லான ஒப்​புதலை ரயில்வே வாரி​யம் அளித்​துள்​ளது.

சென்னை கடற்​கரை - வேளச்​சேரி பறக்​கும் ரயில் தடத்​தில் தற்​போது, தின​மும் 100 சர்​வீஸ் மின்​சார ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன. வேளச்​சேரியை​யும் - பரங்​கிமலை​யை​யும் இணைக்கும் பறக்​கும் ரயில் திட்​டப்​பணி கடந்த 2008-ல் தொடங்​கப்​பட்​டது. பல ஆண்​டு​களாக கிடப்​பில் இருந்த இந்த பணி​கள், தற்​போது முழு வீச்​சில் நடை​பெற்று வரு​கின்​றன.

இதற்​கிடையே, கடற்​கரை - வேளச்​சேரி பறக்​கும் ரயில் வழித்​தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​துடன் இணைக்க திட்​ட​மிடப்​பட்​டது. இதையடுத்​து, மெட்ரோ ரயில் நிறுவன அதி​காரி​கள் இத்​தடத்​தில் உள்ள குறிப்​பிட்ட சில நிலை​யங்​களில் ஆய்வு செய்தனர்.

தொடர்ந்​து, தெற்கு ரயில்​வே​யுடன் பேச்​சு​வார்த்தை நடை​பெற்​றது. இதன்​முடி​வில், தெற்கு ரயில்வே தரப்​பில் ரயில்வே வாரி​யத்​துக்கு பரிந்​துரை அனுப்பி வைக்​கப்​பட்​டது. இருப்​பினும், அனு​மதி கிடைக்​காத​தால், இந்த முயற்சி கடந்த 3 ஆண்​டு​களாக கிடப்​பில் இருந்​தது.

இந்​நிலை​யில், தெற்கு ரயில்வே அதி​காரி​களு​டன் ரயில்வே வாரி​யம் கடந்த 30-ம் தேதி பேச்​சு​வார்த்தை நடத்​தி​யது. இக்​கூட்​டத்​தில், கடற்​கரை - வேளச்​சேரி பறக்​கும் ரயில் தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறு​வனத்​திடம் ஒப்​படைக்க கொள்​கைரீ​தியி​லான ஒப்புதலை ரயில்வே வாரி​யம் அளித்​துள்​ளது.