சென்னையில் மின்சார பேருந்துகள் மூலம் ரூ.90 லட்சம் சேமிப்பு

சென்னையில் மின்சார பேருந்துகள் மூலம் ரூ.90 லட்சம் சேமிப்பு
சென்னையில் மின்சார பேருந்துகள் மூலம் ரூ.90 லட்சம் சேமிப்பு

சென்னை: சென்​னை​யில் மின்சா​ரப் பேருந்​துகள் மூலம் எரிபொருள் செலவு ரூ.90 லட்​சம் சேமிக்​கப்​பட்​டுள்​ளது.

இது தொடர்​பாக மாநகர போக்​கு​வரத்​துக் கழக அதி​காரி​கள் கூறிய​தாவது: சென்னையில் 120 மின்​சா​ரப் பேருந்​துகளின் சேவையை முதல்​கட்​ட​மாக கடந்த மாதம் 30-ம் தேதி சென்னை வியாசர்​பாடி பணிமனை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைத்​தார். அந்த வகை​யில் சென்​னை​யில் இயக்​கப்​படும் மின்​சா​ர பேருந்​துகளில் கடந்த மாதம் 30-ம் தேதி தொடங்கி இந்த மாதம் 28-ம் தேதி வரை 12.80 லட்​சம் பயணங்​கள் மேற்​கொள்​ளப்​பட்டுள்​ளன.

சென்னையில் மின்சார பேருந்துகள் மூலம் ரூ.90 லட்சம் சேமிப்புஇந்த கால​கட்​டத்​தில் டீசல் பேருந்​துகளை இயக்​கி​யிருந்​தால் அரசுக்கு ரூ.1 கோடியே 60 லட்​சம் செல​வாகி இருக்​கும். மின்​சா​ரப் பேருந்​துகளை இயக்​கியதன் மூலம் ரூ.70 லட்​சம் மட்​டுமே செல​வாகி​யுள்​ளது. இதனால் ரூ.90 லட்​சம் சேமிக்​கப்​பட்​டுள்​ளது. இந்த 120 மின்​சா​ரப் பேருந்​துகள் 6 லட்​சத்து 55 ஆயிரம் கிமீ வரை இயக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர்​.