வெளி மாநிலத்தவர்களை தமிழ்நாட்டு வாக்காளர்களாக மாற்ற பாஜக சூழ்ச்சி - கருணாஸ் அறிக்கை

தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வெளிமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கக் கூடாது. வாக்களர்களாக மாற்றக் கூடாது.
தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
வெளிமாநிலத்தவர்களை தமிழ்நாட்டு வாக்களர் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளதை கண்டித்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. என்று தொடர்ந்து பல ஆண்டுகளாக எச்சரித்துக் கொண்டே இருந்தோம்! எந்த அரசும் அதற்கு செவிசாய்க்கவில்லை. இப்போது வெளிமாநிலத்தவரை தமிழ்நாட்டு வாக்காளராக மாற்ற போகிறார்கள் என்ற செய்தி அறிந்ததும் பலர் அலறுகிறார்கள். இப்போதாவது விழித்துக் கொள்ளுங்கள் தமிழர்களே!!
சிறப்பு தீவிர வாக்களர் பட்டியல் திருத்த செயல் திட்டத்தில் பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் பேர் தமிழக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவுள்ளனர். பெரும் அதிர்ச்சி இது! 70 இலட்சம் வெளிமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் வாக்காளர்கள் அதாவது 10% வெளிமாநிலத்திவர் என்றால் நாளை தமிழ்நாட்டு அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்..
இந்த தொலைநோக்குத் திட்டத்தை நீண்டகாலமாக செய்துவருகிறது பா.ஜ.க. எப்படியாவது தமிழ்நாட்டை பீகாராக, மத்திய பிரதேசமாக மாற்றவேண்டும் என்ற திட்டத்தில் இந்திக்காரர்களை மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டிற்கு குடியேற பா.ஜ.க. அரசு அனுமதித்தது. தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள் யார் வந்தாலும் இதை பெரிதாக கண்டுகொள்வதில்லை. வந்தாரை வாழ வைப்போம் என்ற பெரிய மனதோடு தமிழ்நாட்டு வேலைகளுக்கு வெளிமாநிலத்தவரை அனுமதித்தார்கள். இப்போது தமிழ்நாட்டில் அவர்களும் வாக்களர்களாக மாறப் போகிறார்கள்.
வெளிமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை வழங்கக் கூடாது. வாக்களர்களாக மாற்றக் கூடாது. 90% வேலை தமிழ்நாட்டு தமிழர்களுக்கே என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தினோம். இப்போது எல்லாம் தலை கீழாக மாறிவிடுமோ என்ற அச்சம் நமக்கு இருக்கிறது.
கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின்படி தமிழ்நாட்டில் 34 லட்சத்து 87 ஆயிரத்து 974 வெளிமாநிலத்தவர்கள் வேலைக்கு வந்து தங்கி உள்ளனர். இந்த எண்ணிக்கை இப்போது பல மடங்காக மாறிவிட்டது. இந்த வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் முடிந்து விட்டால், தமிழ்நாட்டில் தற்போது உள்ள வெளிமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 70 லட்சம் பேர் தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து வாக்களிக்கும் உரிமை பெறுவர்கள். அவ்வாறு நடந்தால் தமிழ்நாட்டின் எதிர்கால அரசியல் பா.ஜ.க.விடம் கையளிக்கப்படும். ஏனென்றால் பீகார், உத்திரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர் அனைவரும். பா.ஜ.க.விற்குதான் அரசியல் வழியாக பங்குகளிப்பு செய்வார்கள். அப்படி செய்தால் தமிழ்நாட்டின் அரசியல் நிலை என்னவாகும். தமிழ்நாட்டில் எது நடக்கக் கூடாது என்று நினைத்தோமே அது உடனடியாக நடந்தேறும்.