10 ஆண்டுகளாக ஆட்டைய போட்டு சம்பாதித்த தி.மு.க கவுன்சிலர்... ‘கருப்பசாமி’யையே மிஞ்சிய பலே கில்லாடி!

10 ஆண்டுகளாக ஆட்டைய போட்டு சம்பாதித்த தி.மு.க கவுன்சிலர்... ‘கருப்பசாமி’யையே மிஞ்சிய பலே கில்லாடி!
அது மாநகராட்சி சமுதாயக்கூடம்தான்... ஆனா இல்லை

தம்பி... நீங்க மதுரை மாநகராட்சியில சைக்கிள் ஸ்டாண்டதான் குத்தகைக்கு எடுத்திருக்கீங்க. நான் மதுரை மாநகராட்சி யையே குத்தகைக்கு எடுத்திருக்கேன்ல. சைக்கிளுக்கு 50 ரூபா, பைக்குக்கு 100 ரூபா, காருக்கு 300 ரூபா, லாரிக்கு 500 ரூபா, ரயிலுக்கு 1,000 ரூபா, ஃப்ளைட்டுக்கு 5,000 ரூபா. கொடுத்துட்டு டோக்கனை வாங்கிட்டுப் போங்க’’ என்று ‘கருப்பசாமி குத்தகைதாரர்’ படத்தில் செமத்தையாக ‘லந்து’ கொடுத்திருப்பார், வடிவேலு.

அதே மதுரை மாநகராட்சியில் நிஜத்திலேயே ஒரு பார்ட்டி ‘லந்து’ கொடுத்த விஷயம் இப்போது வெளியில் வந்து சந்தி சிரிக்கிறது. மாநகராட்சிக்குச் சொந்தமான சமுதாயக்கூடத்தையே தன் வசப்படுத்தி, 10 ஆண்டுகளாகப் பணத்தை வசூல் செய்து வாழ்ந்திருக்கிறார், முன்னாள் கவுன்சிலர்.

அடி மேல் அடி வாங்கும் மதுரை!

சான்றிதழ் மோசடி, ஸ்மார்ட் சிட்டி ஊழல், ஒப்பந்தத் தொழிலாளர் நியமனம் எனப் பல்வேறு முறைகேடு, நிர்வாகக் குறைபாடுகளுக்குப் பெயர் பெற்ற மதுரை மாநகராட்சியில், சமீபத்தில் ரூ.200 கோடி அளவுக்கு சொத்து வரியில் முறைகேடு நடந்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாநகராட்சி பணியாளர்கள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு, தி.மு.க-வைச் சேர்ந்த ஐந்து மண்டலத் தலைவர்களை ராஜினாமா செய்யச் சொல்லி கட்சித் தலைமை உத்தரவிட்ட சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட, 10 லட்சத்துக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட 40 நகரங் களின் பட்டியலில் மதுரை கடைசி இடமான 40-வது இடத்தைப் பிடித்து, மாநகராட்சி நிர்வாகத்தின் லட்சணத்தை அம்பலப் படுத்தியது. நகர் எங்கும் குப்பைக் குவியல், கழிவுநீர் வழிந்தோடுவது, மோசமான சாலைகள், தெரு விளக்குள் எரியாதது என அடிப்படை பிரச்னைகளைக்கூட தீர்க்க வில்லை என்று மாநகராட்சி நிர்வாகத்தின் மீது மதுரை மக்கள் பல்வேறு புகார்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில்தான்... தற்போது சமுதாயக்கூட ஆக்கிரமிப்பு அவப்பெயரும் சேர்ந்திருக்கிறது மதுரைக்கு.