தங்கம் விலை பாதாளத்திற்கு சரியும்! ஆண்டுக்கு 5,000 கிலோ "செயற்கை" தங்கம் ரெடி! மிக முக்கிய அறிவிப்பு

தங்கம் விலை பாதாளத்திற்கு சரியும்! ஆண்டுக்கு 5,000 கிலோ "செயற்கை" தங்கம் ரெடி! மிக முக்கிய அறிவிப்பு
அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் மெர்குரி எனப்படும் பாதரசத்தைத் தங்கமாக

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் மெர்குரி எனப்படும் பாதரசத்தைத் தங்கமாக மாற்றும் புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. சரியாக எல்லாம் நடந்தால் ஒரு உலையில் இருந்து மட்டும் ஆண்டுக்கு 5000 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்ய முடியுமாம். இது வெற்றிகரமாக முடிந்தால் தங்க மார்கெட்டே ஆட்டம் காணும் என்பதில் சந்தேகம் இல்லை.

தங்கம் தான் உலகெங்கும் மக்களின் முக்கிய சேமிப்பாக இருக்கிறது. உலக நாடுகளின் மத்திய வங்கிகள் கூட தங்கள் ரிசர்வில் தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. தங்கம் என்பதை இயற்கையாகக் கிடைக்கும் ஒன்று. அதைச் செயற்கையாகத் தயாரிக்க முடியாது என்பதே தங்கம் விலை உயர முக்கிய காரணமாக இருக்கிறது. ஆனால், இந்த நிலை சீக்கிரமே மாறலாம்.

செயற்கை தங்கம்

அதாவது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் செயற்கையான முறையில் தங்கத்தைத் தயாரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மெர்குரி எனப்படும் பாதரசத்தைத் தங்கமாக மாற்றும் புதிய முறையைக் கண்டுபிடித்துள்ளதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. எல்லாம் வெற்றிகரமாக நடந்தால் இது வரும் காலத்தில் தங்க மார்கெட்டையே மொத்தமாகப் புரட்டிப் போடும்.

எப்படி சாத்தியம்!

சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த மாரத்தான் ஃபியூஷன் என்ற அந்த நிறுவனம், அணுக்கரு இணைவு செயல்முறையையே (nuclear fusion reactor) பயன்படுத்தித் தங்கத்தை உருவாக்க முடியும் என்று கூறியுள்ளது. அணுக்கரு உலைகளில் இருந்து வரும் நியூட்ரான் துகள்களின் கதிரியக்கத்தைப் பயன்படுத்தி முதலில் பாதரசத்தைப் பாதரசம்-197 ஆக மாற்றியுள்ளனர். அதன் பிறகு அதைத் தங்கமாக மாற்ற முடியும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாதரசத்தைத் தங்கமாக மாற்றும் இந்த அணுக்கரு இணைவு தொழில்நுட்பம், ஒரு மிக பெரிய தளமாக மாற்றும். இது பொருளாதார ரீதியாகவும் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும்" என்று அவர் தெரிவித்தார்.

தங்கம் விலை சரியும்

ஒரு அணுக்கரு மின் உற்பத்தி நிலையம் ஒரு ஜிகாவாட்டிற்கு 5,000 கிலோ தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஒரு ஜிகாவாட் என்பது ஒரு பெரிய அணுமின் நிலையத்தின் சராசரி உற்பத்தித் திறன் ஆகும். அதாவது ஒரு ஜிகாவாட் அணுக்கரு ஆற்றலுக்கு ஆண்டுக்கு 550 மில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை உற்பத்தி செய்ய முடியும். இந்தளவுக்குத் தங்கத்தை உற்பத்தி செய்தால் அதன் விலை தாறுமாறாகக் குறையும் என்பதில் சந்தேகம் வேண்டாம்!

இதில் இன்னொரு விஷயத்தையும் நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். அதாவது இந்த அணுக்கரு உலைகளின் முதன்மை நோக்கம் தங்கத்தை உற்பத்தி செய்வதில்லை. கிளீன் எனர்ஜியை உற்பத்தி செய்வதே இதன் பிரதான நோக்கம். இருப்பினும், ஒரு உப விளைபொருளாக இதில் நமக்குத் தங்கம் கிடைக்கிறது. தங்கம் கிடைத்தாலும் மின்சார உற்பத்தியில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஒரு சிக்கல் இருக்கு

எல்லாம் நல்ல விஷயமாக இருந்தாலும் இதில் ஒரே ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது பாதரசத்தின் மற்ற வகைகள் வேறு தங்க ஐசோடோப்புகளை உற்பத்தி செய்யக்கூடும். இதனால் தங்கம் கதிரியக்கம் கொண்டதாக மாற வாய்ப்புள்ளது. எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் இதில் உற்பத்தியாகும் தங்கத்தில் கதிரியக்க ஆபத்து இருக்கக்கூடும். இந்த தங்கத்தைப் பாதுகாப்பானதாகக் கருத 14 முதல் 18 ஆண்டுகள் வரை தனியாக வைத்திருக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்

ஏன் முக்கியம்

இந்த அணுக்கரு இணைவை (nuclear fusion) கிளின் எனர்ஜி உற்பத்தி செய்யும் மிக முக்கியமான முறையாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது கிரகத்திற்கு வரம்பற்ற, தூய்மையான எனர்ஜியை கொடுக்கும். ஏனென்றால் சூரியனிலும் கூட இதே முறையில் தான் ஆற்றல் உருவாகிறது. இப்போது அணுமின் நிலையங்களில் அணுக்கள் சிறியதாகப் பிளவுபடுகின்றன. ஆனால் அணுக்கரு இணைவு என்பது இதற்கு நேர் மாறானது. இரு அணுக்கருக்கள் ஒன்றிணைக்கப்பட்டு அதிக அளவு ஆற்றல் உருவாக்கப்படுகிறது. அதில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படுகிறது