சபரிமலைக்கு நடிகை கே.ஆர். விஜயா வழங்கிய யானை உயிரிழப்பு

சபரிமலைக்கு நடிகை கே.ஆர். விஜயா வழங்கிய யானை உயிரிழப்பு

சபரிமலை:நடிகை கே.ஆர். விஜயா சபரிமலைக்கு நேர்த்திக்கடனாக வழங்கிய மணிகண்டன் என்ற யானை உயிரிழந்தது.

இவர் நேர்த்திக்கடனாக இந்த யானையை வழங்கிய போது சபரிமலை தந்திரி அதற்கு மணிகண்டன் என்று பெயர் வைத்தார். சபரிமலை கோயில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருப்பதால் காட்டு யானைகள் அதிகமாக உலாவுவதை கருத்தில் கொண்டு இந்த யானை உடனடியாக ஓமலுார் ரக்த கண்ட சாஸ்தா கோயிலில் கொண்டு செல்லப்பட்டு அங்கு வளர்க்கப்பட்டு வந்தது.

பின்னர் சபரிமலையில் நடைபெறும் திருவிழா மற்றும் மகர விளக்கு காலங்களில் ஐயப்பனின் விக்ரகத்தை பல ஆண்டுகள் இந்த யானை சுமந்தது. உடல் நலக்குறைவு உள்ளிட்டவை காரணமாக யானை சபரிமலைக்கு வரவில்லை.

ஒரு மாதகாலமாக ஓமலுார் கோயிலில் இந்த யானை உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தது. ஏராளமான பக்தர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய பின்னர் உடல் அடக்கம் செய்யப்பட்டது