நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் இன்று தொடக்கம்: பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் வரும்

நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் இன்று தொடக்கம்: பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் வரும்
நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் இன்று தொடக்கம்: பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் வரும்நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் இன்று தொடக்கம்: பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் வரும்

சென்னை: நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்​டம் இன்று தொடங்​குவதாகவும் பரிசோதனை முடிவுகள் வாட்ஸ் அப்பில் அனுப்பப்படும் என்றும் அரசு செயலர்​கள் ஜெ.​ரா​தாகிருஷ்ணன், ப.செந்​தில்​கு​மார் தெரி​வித்​தனர். நலம் காக்​கும் ஸ்டா​லின் என்ற புதிய திட்டத்தை இன்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தொடங்கி வைக்​கிறார்.

இந்​நிலை​யில், இந்த திடம் தொடர்​பாக தலை​மைச் செயல​கத்​தில் சுகா​தா​ரத்துறை தொடர்பு அதி​காரி​யும், மின்​வாரிய தலை​வரு​மான ஜெ.​ரா​தாகிருஷ்ணன், சுகா​தா​ரத் துறை செயலர் ப.செந்​தில்​கு​மார் ஆகியோர் கூட்​டாக செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தொடக்​கத்​தில் தொற்று நோய்​கள் அதி​க​மாக இருந்​தன.

ஆனால், தற்​போது வளர்ந்த மற்​றும் வளர்ந்து வரும் நாடு​களில் தொற்றா நோய்​களின் தாக்​கம் அதி​கரித்து வரு​கிறது. இது மிகப்​பெரிய சவாலாக உள்​ளது. அதனால் தான் தமிழக அரசு, மக்​களை தேடி மருத்​து​வம் உள்​ளிட்ட சிறப்பு திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​கிறது.

அதன் தொடர்ச்​சி​யாகவே நலம் காக்​கும் ஸ்டா​லின் என்ற திட்​டத்தை சென்​னை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் ஆக.2-ம் தேதி (இன்று) தொடங்கி வைக்​க​வுள்​ளார். தமிழகம் தாய் சேய் நலன் அனைத்​தி​லும் முன்​னிலை​யில் இருந்​தா​லும், தமிழகத்​தில் குடிசை பகுதி மக்​கள், தூய்​மைப் பணி​யாளர்​கள், கட்​டிடத் தொழிலா​ளி​கள் போன்ற சாதாரண மக்​கள் தங்​களின் உடல் நிலையை மருத்துவரீ​தி​யாக முன்​கூட்​டியே பரிசோ​திப்​ப​தில்​லை.

மக்​கள் தங்​களின் உடல் நிலையை நோய் வரும் முன்பே மருத்​து​வரீ​தி​யாக பரிசோ​திப்​ப​தில்லை என்​ப​தால் அதை நோக்​க​மாகவைத்​து, நலம் காக்​கும் ஸ்டா​லின் திட்டம் தொடங்​கப்​படு​கிறது. இந்த திட்​டத்​தில் அனை​வரும் பங்​கேற்​கலாம்.

மாவட்​டம்​தோறும் அரசு விடு​முறை இல்​லாத நாட்​களில், குறிப்​பாக சனிக்​கிழமை​களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை இந்த திட்​டம் தொடர்​பான சிறப்பு முகாம் நடை​பெறும்.

ரத்த அழுத்​தம், சர்க்​கரை நோயாளி​கள், இதய நோய்​கள், மனநலன் பாதிப்பு உள்ளவர்கள், கர்ப்​பிணி​கள், பாலூட்​டும் தாய்மார்கள், ஊட்​டச்​சத்து குறை​பாடு உள்​ளவர்​கள், மாற்​றுத் திற​னாளி​கள் உள்​ளிட்ட அனை​வருமே இந்த முகாம்​களை பயன்படுத்தலாம். இதன்​படி மொத்​தம் 1,256 முகாம்​கள் நடை​பெறவுள்​ளன.

சென்​னை​யில் 15 மண்​டலங்​களில் முகாம்​கள் நடை​பெறும். முகாம் நடக்​கும் இடத்​தில் தொழில்​நுட்ப மேம்​பாட்​டுடன் கூடிய நோய் கண்​டறி​யும் வசதி​கள் இருக்​கும். பரிசோதனை​கள் மேற்​கொள்​ளப்​பட்​டு, பிற்​பகலுக்​குள் வாட்​ஸ்​அப் மூலம் பரிசோதனை முடிவு​கள் தெரிவிக்​கப்​படும். தேவைப்​படு​வோர் தொடர் சிகிச்​சைக்​குள் கொண்டு வரப்​படு​வார்​கள்.

மற்ற துறை​களும் இந்த முகாமில் பங்​கேற்​ப​தால், மருத்​து​வக் காப்​பீட்டு வசதி​கள், மாற்​றுத் திற​னாளி​களுக்கு அடை​யாள அட்டைகள் வழங்​குதல் போன்ற கூடு​தல் வசதி​களும் முகாமில் வழங்​கப்​படும். இந்த திட்​டத்​தின் செயல்​பாட்டை தலைமை செயலா​ளர் தலை​மையி​லான மாநில கண்​காணிப்பு குழு​வினர் ஆய்வு செய்​வார்​கள்.

இந்த முகாமில் பெயர் பதிவு செய்​பவர், பிற்காலங்​களில் தமிழகத்​தில் வேறு எந்த மருத்​து​வ​மனைக்கு சென்​றாலும் அவரது உடல்நல விவரங்​களை கண்​டறி​யும் வசதி​யும் செய்​யப்​பட்​டுள்​ளது. நோய் வராமல் தடுக்க உணவு விழிப்​புணர்வு அறி​வுரைகள் வழங்​கப்​படும். முகாம்​களில் உயர்தர சிகிச்சை நிபுணர்​களும், 5 வகை​யான இந்​திய மருத்​து​வ​முறை நிபுணர்​களும் உள்ளனர்.

ஆதி​தி​ரா​விடர்​கள், பழங்​குடி​யினர், தூய்​மைப் பணி​யாளர்​கள், தொழிலா​ளர் ஆகியோரை பங்​கேற்​கச் செய்ய அந்​தந்த துறை​கள் நடவடிக்கை மேற்​கொள்​கின்​றன.

தூய்மை பணி​யாளர்​கள் நலவாரி​யத்​தில் 3 லட்​சம் பேர் உள்​ளனர். 20 தொழிலா​ளர் நலவாரி​யங்​களில் 48.56 லட்​சம் பேர் உள்​ளனர். அமைப்​பு​சாரா தொழிலில் உள்​ளவர்​களும் இருக்​கின்​றனர். இவர்​களுக்கு உடல்​நலன், நோய்​தடுப்பு பற்​றிய விழிப்​புணர்​வும் தரப்படும்.

பிப்​ர​வரி வரை முகாம்: இந்த ஆகஸ்ட் முதல் வரும் பிப்​ர​வரி வரை முகாம்​கள் தொடர்ந்து நடத்​தப்​படும். பின்​னர், தேவைப்பட்டால் முகாம்​கள் நடத்​தப்​படும். நோயை கண்​டறிந்​து, நோயாளி​களுக்கு தொடர் சிகிச்சை கிடைக்க ஏற்​பாடு செய்வது, இந்த திட்​டத்​தின் நோக்​கம் ஆகும்.

திட்​டத்​தின் முதல் கட்​டத்​தில் குறைந்​த​பட்​சம் 10 லட்​சம் பேர் வரு​வார்​கள் என்று எதிர்ப்​பார்க்​கப்​படு​கிறது. இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​தனர். தொழிலா​ளர் நலத்​துறை செயலர் கொ.வீர​ராகவ​ராவ், ஆதி​தி​ரா​விடர் மற்​றும்​ பழங்​குடி​யினர்​ நலத்​துறை செயலர்​ ஜி.லட்​சுமிப்​பிரி​யா உள்​ளிட்​டோர்​ உடன்​ இருந்​தனர்.