தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி மற்றும் கடலை மிட்டாய் உற்பத்தியாளர்களுடன் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி.
கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி பேசிய போது

கோவில்பட்டி: தீப்​பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள பிளாஸ்​டிக் லைட்​டர்​களை தடை செய்​யு​மாறு மத்​திய அரசிடம் வலியுறுத்து​வோம் என்று அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார். ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப்பயணத்​துக்​காக நேற்று முன்​தினம் இரவு கோவில்​பட்டி வந்த பழனி​சாமி நேற்று காலை செண்​பகவல்லி அம்​மன் கோயி​லில் தரிசனம் செய்​தார்.

பின்​னர், தனி​யார் மண்​டபத்​தில் நடந்த நிகழ்ச்​சி​யில் தீப்​பெட்டி உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் கடலை மிட்​டாய் உற்பத்தியாளர்களுடன் கலந்​துரை​யாடி​னார். நேஷனல் சிறு தீப்​பெட்டி உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கத் தலை​வர் எம்​.பரமசிவம் பேசும்​போது, “கோ​வில்​பட்​டியை தலை​மை​யிட​மாகக் கொண்டு புதிய மாவட்​டத்தை உரு​வாக்க வேண்​டும். தீப்​பெட்டி தொழிலுக்கு அச்​சுறுத்​தலாக உள்ள, ஒரு​முறை பயன்​படுத்​தக்​கூடிய லைட்​டர்​களை தடை செய்ய வேண்​டும்.

இதுகுறித்து தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து 6 மாதங்​களாகி​யும் எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. ஆனால், அதி​முக ஆட்​சி​யின்​போது நாங்​கள் வைத்த கோரிக்​கைகள் உடனே நிறைவேற்​றப்​பட்​டன. எனவே, பிளாஸ்​டிக் லைட்​டர்​களை நாடு முழுவதும் தடை செய்​யு​மாறு மத்​திய அரசிடம் வலி​யுறுத்த வேண்​டும்” என்றார்.

சத்​துண​வில் கடலைமிட்​டாய்: கடலை மிட்​டாய் உற்​பத்​தி​யாளர்​கள் சங்​கச் செய​லா​ளர் கே.கண்​ணன் பேசும்​போது, “அதிக புரதச் சத்து கொண்ட கடலைமிட்​டாயை சத்​துணவு திட்​டத்​தில் இணைத்​து, வாரம் இரு​முறை பள்​ளிக் குழந்​தைகளுக்கு வழங்க வேண்டும்” என்​றார். தொடர்ந்​து, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பேசி​ய​தாவது: சிறு, குறு தொழில் நிறு​வனங்​களுக்கு அதி​முக ஆட்​சி​யின்​போது அதிக சலுகைகளும். வசதி​களும் செய்​யப்​பட்​டன.

தீப்​பெட்​டிக்கு விதிக்​கப்​பட்​டிருந்த 18 சதவீத ஜிஎஸ்டி வரியை 12 சதவீத​மாக குறைக்க அதி​முக ஆட்​சி​யின்​போது மத்​திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுத்​தோம். தற்​போது தீப்​பெட்டி தொழிலுக்கு நெருக்​கடி​யான சூழல் உரு​வாகி​உள்​ளது. தீப்​பெட்டி தொழிலுக்கு சவாலாக உள்ள பிளாஸ்​டிக் லைட்​டர்​களை தடை செய்​யு​மாறு மத்​திய அரசை வலி​யுறுத்​து​வோம்.

தாமிரபரணி-வைப்​பாறு திட்​டம் அதி​முக ஆட்​சி​யில் அறிவிக்​கப்​பட்​டு, நிலம் கையகப்​படுத்​தும் பணி​கள் தொடங்​கப்​பட்​டன. திமுக ஆட்​சிக்கு வந்​ததும், அந்த திட்​டம் கிடப்​பில் போடப்​பட்​டது. அதி​முக ஆட்சி அமைந்​தவுடன் இத்​திட்​டம் மீண்​டும் தொடங்கப்படும். விவ​சாய விளை பொருள்​களுக்கு நியாய​மான விலை கிடைக்க, அதி​முக ஆட்​சி​யில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தீப்​பெட்டி மற்​றும் கடலை மிட்​டாய் தொழில் சிறக்க அதி​முக என்​றும் துணைநிற்​கும். இவ்​வாறு அவர் பேசி​னார். நிகழ்ச்​சி​யில், முன்​னாள் அமைச்​சர்​கள் கடம்​பூர் செ.​ராஜு, ஆர்​.பி.உதயகு​மார் சி.​விஜய​பாஸ்​கர், தளவாய் சுந்​தரம் மற்​றும் தீப்​பெட்​டி, கடலை மிட்​டாய் உற்​பத்​தி​யாளர்​கள் கலந்து கொண்​டனர்.