வாஷிங்டன் அமெரிக்க பொருட்களுக்கு 0 வரி! ஆனா இந்தியா 19% கப்பம் கட்டணுமாம்! டிரம்ப் சொல்லும் கணக்கு

வாஷிங்டன்: இந்தோனேசியாவுடன் அமெரிக்கா எந்த மாதிரியான வர்த்தக ஒப்பந்தத்தை போட்டிருக்கிறதோ, அதேபோன்று இந்தியாவுடனும் வர்த்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று டிரம்ப் கூறியுள்ளார். இந்த வர்த்தகம் இந்தியாவுக்கு லபமா? என்பது குறித்து தற்போது கேள்விகள் எழுந்திருக்கின்றன.
டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபரான பின்னர் 'பரஸ்பர வரி' குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதாவது எங்கள் நாட்டுக்கு மற்ற நாடுகள் எந்த அளவுக்கு வரியை போடுகிறதோ! அதே அளவுக்கு நாங்களும் வரியை போடுவோம் என்பதுதான் இந்த 'பரஸ்பர வரி
இந்தோனேசியாவுக்கு வரி
அந்த வகையில் மற்ற நாடுகளை போல இந்தோனேசியாவுக்கும் அமெரிக்கா வரியை போட்டது. மொத்தம் 32% வரி. அதாவது இந்தோனேசியாவிலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும் பொருட்களுக்கு இந்த வரி விதிக்கப்படும். இதனால் இந்தோனேசியா பொருட்களின் விலை அமெரிக்காவில் உயரும்
வரி குறைப்பு எனும் கண்துடைப்பு
இந்த வரி அதிகமாக இருந்ததால் குறைக்க வேண்டும் என்று இந்தோனேசியா பேச்சுவார்த்தையில் இறங்கியது. தற்போது பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டு வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது. அதாவது, இந்தோனேசிய பொருட்களுக்கான வரி 32%லிருந்து 19% ஆக குறைக்கப்பட்டது. அதேபோல, அமெரிக்க பொருட்கள் எந்த வரியும் இல்லாமல் இந்தோனேசியாவில் விற்கப்படும்.
இதுக்கு பேர்தான் பரஸ்பர வரியா?
'பரஸ்பர வரி' என்று சொன்னா இரண்டு பக்கமும் வரி சமமா இருக்கும்னு சொன்னீங்க. இப்போ, அமெரிக்காவுக்கு வரியே இல்லை என்று சொல்றீங்களே! என கேள்வி எழலாம். ஆனால் இதுதான் உண்மை.
இதேபோன்ற ஒரு வர்த்தக செட்டப்பை இந்தியாவுடன் மேற்கொள்ள அமெரிக்கா முயன்று வருகிறது. இதனை டிரம்ப் உறுதி செய்திருக்கிறார். அதாவது, "இந்தியா அடிப்படையில் இந்தோனேசியா பாதையில் செயல்படுகிறது. நாங்கள் இந்தியாவிற்குள் நுழையப் போகிறோம்" என்று கூறியுள
அமெரிக்க ஆதரவாளர்களின் உருட்டு
இதில் சில நன்மைகளும் இருப்பதாக அமெரிக்க ஆதரவாளர்கள் உருட்டுகின்றனர். அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலிருந்து சற்று நிம்மதி கிடைக்கும் என்று கூறுகின்றனர். இந்த ஒப்பந்தத்தை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனில், இந்தியாவுக்கு 50% வரியை போட கூட அமெரிக்கா தயங்காது. அதேபோல அமெரிக்க சந்தைக்கு நிரந்தரமான அணுகல் இதன் மூலம் கிடைக்கும் என்றும் கூறுகிறார்கள்.
முதலீடுகளும் வேலை வாய்ப்பும்
வரி 19% தானே! ஆனால் உலகின் மிகப்பெரிய சந்தையில் இந்திய பொருட்கள் விற்பனைக்கு இருக்கும் என்பது ஆறுதலான விஷயம்தானே! இது நேரடியாக அமெரிக்க டாலரை பெறும் முயற்சி. எனவே இதை விட்டுவிட வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்கள். அதேபோல இந்த வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம், அமெரிக்காவிலிருந்து நிறைய முதலீடுகள் இந்தியாவில் குவியும். இதனால் வேலை வாய்ப்புகள், தொழில்நுட்ப பரிமாற்றங்கள் உள்ளிட்டவை ஏற்படும் என்றும் கூறுகிறார்.
யதார்த்தம் இதுதான்.
உண்மை என்ன? அமெரிக்க நிறுவனமாகவே இருந்தாலும் அது இந்தியாவுக்கு வந்தால், அடிமாட்டு விலைக்குதான் தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பார்கள். தொழில்நுட்ப பரிமாற்றங்கள் பற்றி சொல்ல வேண்டும் எனில், அமெரிக்க நிறுவனங்கள் அவ்வளவு சீக்கிரம் தொழில்நுட்ப ரகசியங்களை பகிர்ந்துக்கொள்ளாது. F-35 விமானங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா முன்வந்தது. ஆனால் அதன் தொழில்நுட்பத்தை பகிர்ந்துக்கொள்ளவில்லை. இப்படி இருக்கையில் முதலீடு விஷயத்தில் மட்டும் எப்படி தொழில்நுட்பங்கள் பகிர்ந்துக்கொள்ளும்?
ஆனால் அரசியல் ராஜதந்திர உறவுகளில் சில பாசிட்டிவ் மாற்றங்கள் ஏற்படும். சீனாவின் அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியாவுக்கு இது அவசியம். இருப்பினும் இந்த ஒரே காரணத்திற்காக வரி விஷயத்தை விட்டு கொடுக்க வேண்டுமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.