சென்னையில் எங்கு திரும்பினாலும் ஸ்டாக் இல்லை.. கியாஸ் தட்டுப்பாடு.. ஆட்டோ டிரைவர்கள் பரிதவிப்பு

சென்னையில் எங்கு திரும்பினாலும் ஸ்டாக் இல்லை.. கியாஸ் தட்டுப்பாடு.. ஆட்டோ டிரைவர்கள் பரிதவிப்பு
சென்னை: சென்னை நகருக்குள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரங்களில் கனரக வாகனங்கள்

சென்னை: சென்னை நகருக்குள் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரங்களில் கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழைவதற்கு போக்குவரத்து போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். கனரக வாகனங்கள் நுழைய விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடு காரணமாக சென்னையில் உள்ள கியாஸ் நிரப்பும் மையங்களில் கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் உள்பட வாகன ஓட்டிகள் எரிபொருள் நிரப்ப முடியாமல் பரிதவித்து வருகிறார்கள்.

சென்னையில் முன்பு போல் இல்லை.. பெரும்பாலான வாகனங்கள் இயற்கை எரிவாயு மற்றும் மின்சாரத்தால் இயங்குவது அதிகரித்துள்ளது. கேஸ் சிலிண்டர் போட்டு தான் கார்கள் பல ஓடுகின்றன. அதேபால் பல எரிபொருளுக்கான செலவை குறைப்பதற்காக சென்னையில் ஓடும் பெரும்பாலான ஆட்டோக்கள் இயற்கை எரிவாயுவை தான் பயன்படுத்தி வருகின்றன.

சென்னையில் பீக் அவர்ஸ் எனப்படும் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வருவதற்கு தடை உள்ளது. அதேநேரம் எரிபொருள் விநியோகிக்கும் லாரிகள், தண்ணீர் லாரிகள் மட்டும் நகருக்குள் வந்து சென்றன. இந்நிலையில் சென்னை கொளத்தூரில் கடந்த மாதம் சவுமியா என்ற 5-ம் வகுப்பு மாணவி பள்ளிக்கு சென்றபோது குடிநீர் வாரிய ஒப்பந்த லாரியின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள நேரங்களில் கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் நுழைவதற்கு போக்குவரத்து போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள். விபத்து ஏதேனும் நடந்தால் அந்த பகுதி காவலர்கள் தான் அதற்கு பொறுப்பாக்கப்படுகிறார்கள்.இதனால் போக்குவரத்து காவலர்கள் நகருக்குள் கனரக வாகனங்களை சுத்தமாக அனுமதிப்பது இல்லை..

இதனால் அண்டை மாவட்டங்களில் இருக்கும் உற்பத்தி நிலையங்களில் இருந்து சென்னை நகருக்கு அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவை (சி.என்.ஜி.) லாரிகளில் கொண்டு வருவதில் தாமதம் ஏற்படுகிறது. நேரக்கட்டுப்பாடு முடிவடையும் வரையிலும் நகரின் வெளியே எரிவாயு உடன் டேங்கர் லாரிகள் மணிக்கணக்கில் காத்து நிற்கின்றன. இதனால் நகருக்குள் இருக்கும் கியாஸ் நிரப்பும் மையங்களில் கடுமையான தட்டுப்பாடு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.