கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம்

கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம்
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கடந்த 33 நாட்களாக நிறுத்தப்பட்டிருக்கு பிரித்தானியாவின் F-35B போர் விமானம், இந்தியாவிற்கு ஒரு ஆச்சரியமான வருமான வாய்ப்பாக மாறியுள்ளது.

ஜூன் 14-ஆம் திகதி, தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறங்கிய இந்த அமெரிக்க தயாரிப்பு 5வது தலைமுறை விமானம், இதுவரை தினசரி ரூ.26,261 எனும் கட்டணத்தில் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

ஜூலை 6-ஆம் திகதி, பிரித்தானியாவின் ராயல் ஏர்போர்ஸின் 24 நபர் கொண்ட குழு (14 தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் 10 விமான ஊழியர்கள்) வந்தனர். அவர்கள் விமானத்தின் நிலைமை ஆய்வு செய்து, இந்தியாவிலேயே பழுது சரி செய்யலாமா அல்லது பிரித்தானியாவிற்கு மீண்டும் அனுப்ப வேண்டுமா என்பதைக் கூறினர்

இந்த விமானம் 110 மில்லியன் டொலர் மதிப்புடையது என்பதுடன், STOVL (Short Take-Off and Vertical Landing) திறனுடன் உலகின் மிக நவீன போர் விமானங்களில் ஒன்றாகும். இது தளவாட வசதிகள் குறைந்த விமான தளங்களிலும் செயல்பட முடியும்.

இந்த விமானத்தை மீண்டும் பறக்க வைப்பதற்கான முயற்சியில் இந்திய விமானப்படை முழுமையான உதவிகளை வழங்கியுள்ளது. தற்போது, இது சீரமைக்கப்பட்டு மீண்டும் பறக்க வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.