AC ரயிலில் ஹேப்பி.. 50 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்.. 1200 தூங்கும் வசதி பெட்டிகள்! சென்னை ஐசிஎப் செம

சென்னை: வந்தே பாரத் ரயில்கள், பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.. இதையடுத்து, வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை குறைத்து, ஸ்லீப்பர் வசதியுள்ள வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க போவதாக ஐசிஎப் அறிவித்திருந்த நிலையில், புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.. அதன்படி, ஐசிஎப் எனப்படும் ஒருங்கிணைந்த ரயில் பெட்டிகள் தயாரிப்பு தொழிற்சாலையில், வரும் 2027ம் ஆண்டில், 50 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
வந்தே பாரத் ரயில்கள், பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன.. இதுவரை, 77 வந்தே பாரத் ரயில்கள், நாட்டின் முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன. எனினும், ரயில்களின் தேவை அதிகமாகவே உள்ளது. அதனால்தான், வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை குறைத்து, ஸ்லீப்பர் வசதியுள்ள வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க போவதாக ஐசிஎப் அறிவித்திருக்கிறது.
இந்தியாவில் 77 வந்தே பாரத் ரயில்கள் முக்கிய வழித்தடங்களில் தற்போது இயக்கப்பட்டு வரும்நிலையில், ரயில்களின் தேவை அதிகமாகவே உள்ளது. மேலும், பயணிகளிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருவதால், பாரத் ரயில்கள் தயாரிப்பை குறைத்து, ஸ்லீப்பர் வசதியுள்ள வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகப்படுத்தும் நோக்கில், உலகளவில் ரயில் பெட்டிகளை தயாரிக்கும் சென்னை ஐசிஎப் களமிறங்கியிருக்கிறது.
வந்தே பாரத் அதிரடி
இதுவரை ஐசிஎப்பில் 88 ரயில்களுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ரயில்கள் மட்டுமல்லாமல், சாதாரண பெட்டிகளை கொண்ட "வந்தே சதரன்" ரயில் பெட்டிகள், வந்தே மெட்ரோ ரயில்கள், அம்ரித் வந்தே மெட்ரோ ரயில்கள், வந்தே பாரத் ரயில் பெட்டிகள், எல்எச்பி பெட்டிகள், மெமு ரயில் பெட்டிகள் என பல்வேறு ரயில்களின் பெட்டிகளும் ஐசிஎப்பில்தான் தயாராகின்றன.
இதில், ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களுக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தபடியே உள்ளது..
எனவே, நீண்ட தூரம் பயணம் செய்யும் வகையில், இந்த படுக்கை வசதி கொண்ட ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களின் எண்ணிக்கையையும் அதிகப்படுத்த ஐசிஎப் அதிகாரிகள் முடிவு செய்திருக்கிறார்கள்.
ஐசிஎப் அதிரடி
பல்வேறு மண்டலங்களுக்கு கீழ் ஸ்லீப்பர் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை இயக்க ரயில்வே வாரியத்திடம் பட்டியல் அளிக்கப்பட உள்ளதாகவும், இதில் 16 பெட்டிகள், 24 பெட்டிகள் என 2 வகையான ஸ்லீப்பர் வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க திட்டமிட்டு, இன்னும் 2 வருடங்களில் 50 ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தன..
வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை குறைத்து, ஸ்லீப்பர் வசதியுள்ள வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பை அதிகரிக்க போவதாக ஐசிஎப் தெரிவித்திருப்பது பொதுமக்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது.
தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள்
இந்நிலையில், வரும் 2027ம் ஆண்டில், 50 வந்தே பாரத் ரயில்களுக்கான, 1,200 தூங்கும் வசதியுடைய பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன என்று , ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள்.... அதாவது, 24 பெட்டிகள் கொண்ட 50 வந்தே பாரத் ரயில்களுக்கு, 1,200 பெட்டிகள் தயாரிக்கும் பணி துவங்கப்போகிறார்களாம்.. ஒவ்வொரு வந்தே பாரத் தூங்கும் வசதி பெட்டி உடைய ரயிலும், தலா 120 கோடி ரூபாயில் தயாராக உள்ளதாம்..
இது குறித்து, ஐசிஎப் முதன்மை மக்கள் தொடர்பு அலுவலர் ஆர்.செந்தில்குமார் சொல்லும்போது, ''வந்தே பாரத் ரயில்களுக்கான பெட்டிகள், அதிக அளவில் சென்னை ஐசிஎப்பில் தயாரிக்கப்பட்டு வருகின்றன... வரும் 2027ம் ஆண்டுக்குள், 10 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு இயக்கப்படும். அதன்பின் 1,200 பெட்டிகள் தயாரிக்கும் பணிகள் துவக்கப்படும்,'' என்றார்..
பயணியர் ரயில் பெட்டிகள் அனைத்தையும், மெமு ரயில் பெட்டிகளாக்கும் திட்டம், ஓரிரு ஆண்டுகளில் முழுமையாக அனைத்து கோட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளதாக ஏற்கனவே ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது 50 வந்தே பாரத் ரயில்களுக்கான, 1,200 துாங்கும் வசதியுடைய பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளதாக வெளியாயிருக்கும் தகவல் பயணிகளின் கவனத்தை பெற்று வருகிறது.