பூமியை கண்காணிக்கிறார்களா ஏலியன்ஸ்கள்?

பூமியை கண்காணிக்கிறார்களா ஏலியன்ஸ்கள்?
திடீரென தென்படும் விண்வெளி பொருள்.. மர்மம் உடையுமா?

வாஷிங்டன்: அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் அட்லஸ் தொலைநோக்கி, 3I/ATLAS எனப் பெயரிடப்பட்ட ஒரு விண்மீனிடைப் பொருளைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்மீனிடை இதுவரை கண்டறியப்பட்டவைகளில் மிகப்பெரியது ஆகும். அதாவது, இதன் நீளம் சுமார் 20 கிலோமீட்டர்கள் ஆகும்...

இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டும் தான் உயிர்கள் வாழ்கின்றனவா? அல்லது வெஏறு ஏதேனும் கோள்களிலும் உயிர்கள் வாழ்கின்றனவா? நம்மை வேறு எங்கே இருந்தோ ரகசியமாக வேற்றுகிரக வாசிகள் கண்காணிக்கிறார்களா? என கற்பனைக்கும் எட்டாத பல்வேறு மர்மங்கள் உள்ளன...

புதிய விண்மீனிடை கண்டுபிடிப்பு

வேற்று கிரகவாசிகள் என ஒன்றே கிடையாது என ஒரு தரப்பினரும், வேற்று கிரக வாசிகள் இருக்க வாய்ப்புள்ளதாக மற்றொரு தரப்பு விஞ்ஞானிகளும் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்கள். அமெரிக்காவின் நாசா உள்ளிட்ட விண்வெளி ஆய்வு அமைப்புகளும் வேற்று கிரகவாசிகள் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், புதிய விண்மீனிடை (interstellar) ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளன..

வேற்று கிரகவாசிகள் பூமியை கண்காணிக்க அனுப்பிய பொருளா? என்ற விவாதமும் விஞ்ஞானிகள் மத்தியில் எழுந்துள்ளது இது பற்றி பார்க்கலாம். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் அட்லஸ் தொலைநோக்கி, 3I/ATLAS எனப் பெயரிடப்பட்ட ஒரு விண்மீனிடைப் பொருளைக் கண்டுபிடித்துள்ளது. இந்த விண்மீனிடை இதுவரை கண்டறியப்பட்டவைகளில் மிகப்பெரியது ஆகும்.

வேற்றுகிரக தொழில்நுட்பம்?

அதாவது, இதன் நீளம் சுமார் 20 கிலோமீட்டர்கள் ஆகும். இதன் எடை மற்றும் அளவு விஞ்ஞானிகளிடையே ஒரு பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விண்மீனிடை வரும் டிசம்பர் மாதம் பூமியை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பூமியிலிருந்து சுமார் 270 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அந்த சமயத்தில் இருக்கும். சூரிய மண்டலத்திற்குள் நுழைந்த மூன்றாவது விண்மீனிடைப் பொருள் இதுவாகும்...

இந்த விண்மீனிடைப்பொருள் குறித்து விஞ்ஞானிகள் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த வானியல் ஆய்வாளர் ஏவி லோப் இது பற்றி கூறியதாவது:- இந்த இண்டெர்செல்லர் இயற்கையானதாக இல்லை. இது வேற்றுகிரக தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம்" என்றார்.

வேற்று கிரகங்களின் கண்காணிப்பில் பூமி

அதன் பாதையும், வேகமும், கலவையும் எந்த இயற்கையான வானியல் பொருளுக்கும் ஒத்திருக்கவில்லை என்பதும் அவரது கூற்றாக உள்ளது. இதனால், இந்த விண்மீனிடைப்பொருள் குறித்த பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. 3I/ATLAS ஒரு சமிக்ஞையாகவோ அல்லது சாதனமாகவோ இருந்தால், வேற்றுகிரகங்களின் கண்காணிப்பில் பூமி இருக்கலாம் என்று ஏவி லோப் கருத்தை முன்வைக்கிறார்...

டார்க் ஃபாரஸ்ட் கருதுகோளை" முன்வைத்து, எண்ணற்ற வேற்றுகிரக நாகரிகங்கள் மறைந்திருக்கலாம் என்பதும் அவருடைய கருத்தாக உள்ளது. இது அமைதியான சமிக்ஞையா அல்லது ஆபத்தான ஒன்றின் ஆரம்பமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இந்த விண்மீனிடைப் பொருள் அடர்த்தியான வாயு மற்றும் தூசி படலத்தால் சூழப்பட்டுள்ளது. இதன் மர்மமான அமைப்பு விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

விண்வெளி பாறையாக இருக்கலாம்

சூரிய மண்டலத்தை நோக்கி திட்டமிட்டபடி அனுப்பப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது விஞ்ஞானிகள் மத்தியில் ஒரு பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேவேளையில், லோபின் கருத்துகளை பலரும் ஏற்கவில்லை. இது தொலைதூர நட்சத்திரங்களின் ஈர்ப்பு விசையால் வெளியேற்றப்பட்ட ஒரு இயற்கை விண்வெளி பாறையாக இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்..

இருப்பினும், அனைத்து தரவுகளையும் ஆய்வு செய்யாமல் வேற்றுக்கிரக கோட்பாட்டை நிராகரிக்க வேண்டாம் என்று லோப் கூறியிருக்கிறார். விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார்கள். 3I/ATLAS டிசம்பரில் பூமியை நெருங்கும் போது, அதன் இயல்பைக் கண்டறிய உலகம் முழுவதும் உள்ள வானியலாளர்கள் ஆர்வமாக உள்ளனர். இதற்கு முன்பு 1I/'Oumuamua என்ற விண்மீனிடைப் பொருளையும் வேற்றுகிரக தொழில்நுட்பமாக இருக்கலாம் என்று லோப் கூறியிருந்தார். இது தொடர்பாக பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

காத்திருக்கும் ஆய்வாளர்கள்

இந்த கண்டுபிடிப்பு வேற்றுகிரக தொழில்நுட்பத்தின் சாட்சியாக இருந்தால், அது மிகப்பெரிய அறிவியல் முன்னேற்றமாகவோ அல்லது புதிய ஆபத்தாகவோ இருக்கலாம். விஞ்ஞானிகளும், ஆர்வலர்களும் பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோமா என்பதை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றனர். மேலும் தகவல்களுக்காக அனைவரும் காத்திருக்கிறார்கள். பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோமா அல்லது வேறு யாரேனும் நம்மை கண்காணிக்கிறார்களா என்ற ஆய்வுக்கு இந்த விண்மீனிடை உதவும் என்பதால், ஆய்வு முடிவுகளுக்காக விஞ்ஞானிகள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்...