7-0 என WIN பண்ணதெல்லாம் வீண்!’ சேப்பாக்கை வீழ்த்தி முதல்முறையாக FINAL-ல் திருப்பூர் தமிழன்ஸ்!

’7-0 என WIN பண்ணதெல்லாம் வீண்!’ சேப்பாக்கை வீழ்த்தி முதல்முறையாக FINAL-ல் திருப்பூர் தமிழன்ஸ்!
2025 TNPL தொடரில் முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளது திருப்பூர் தமிழன்ஸ் அணி
லைக்கா கோவை கிங்ஸ், ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ், நெல்லை ராயல் கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், திருச்சி கிராண்ட் சோழாஸ் முதலிய 8 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்திய நிலையில், 28 லீக் போட்டிகள் முடிவில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் திருச்சி கிராண்ட் சோழாஸ் முதலிய 4 அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியுள்ளன.
203 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களம்கண்ட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் கேப்டன் அபரஜித்தை தவிர வேறு எந்த பேட்ஸ்மேனும் சோபிக்கவில்லை. 4 சிக்சர்கள் அடித்து அச்சுறுத்திய அபரஜித் 30 ரன்னில வெளியேற, 113 ரன்னுக்கே சுருண்டது சேப்பாக் அணி
அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய எசக்கிமுத்து மற்றும் மதிவாணன் இருவரும் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்ற 79 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற திருப்பூர் தமிழன்ஸ் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று அசத்தியது.
இன்று நடக்கவிருக்கும் எலிமினேட்டர் போட்டியில் அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் அணி, ஜெயராமன் தலைமையிலான திருச்சி அணியை எதிர்கொண்டு விளையாடவிருக்கிறது.