ஏறிய வேகத்தில் சரிந்த தங்கத்தின் விலை.... காசு இருந்த உடனே வாங்குங்க

ஏறிய வேகத்தில் சரிந்த தங்கத்தின் விலை.... காசு இருந்த உடனே வாங்குங்க
தங்கத்தோட விலை இறங்குனதால எல்லாரும் சந்தோஷத்துல இருக்காங்க. ஜூலை மாசம் ஆரம்பிச்சதுல இருந்து விலையில ஏத்த இறக்கம் இருந்துட்டே இருக்கு. ட்ரம்ப் எடுத்த வரி நடவடிக்கை காரணமா விலை இன்னும் ஏறலாம்னு சொல்றாங்க. இன்னைக்கு ஒரு கிராம் தங்கம் 60 ரூபாய் குறைஞ்சு 9,000 ரூபாய்க்கு விக்குது. வெள்ளியோட விலையில எந்த மாற்றமும் இல்ல. தங்கம் வாங்க இது சரியான நேரமா

தங்கத்தின் விலை நேற்று உயர்ந்திருந்த நிலையில் இன்று சரிந்துள்ளது. இதனால் பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்து ஒருவிதமான ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. டிரம்பின் வரி நடவடிக்கையால் தங்கத்தின் விலை இனி வரும் நாட்களில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 9ம் தேதியான இன்று தங்கத்தின் விலை ரூ.480 குறைந்துள்ளது.

22 காரட் தங்கத்தின் விலை நிலவரம்

ஆபரணம் செய்ய பயன்படுத்தப்படும் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 வீழ்ச்சி அடைந்து ரூ.9,000 என்ற நிலையில் விற்பனையாகிறது. 1 பவுன் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ. 72,000 என்ற நிலையில் உள்ளது. கடந்த ஒரு வாரமாக ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.9,000க்கு மேல் இருந்தது.

24 காரட் தங்கத்தின் விலை நிலவரம்

முதலீட்டு நோக்கில் வாங்கப்படும் தங்கமான 24 காரட் ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.9,818க்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 கிராம் தங்கத்தின் விலை ரூ.78,544 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை:

தங்கத்தின் விலையில் சரிந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் உள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.120 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,20,000 என்ற நிலையில் விற்பனை செய்யப்படுகிறது.