லட்சம் ரூபாயை 40 லட்சமாக மாற்றும் யுக்தி..!! முதலீட்டில் இப்படி ஒரு டெக்னிக் இருக்கா.

லட்சம் ரூபாயை 40 லட்சமாக மாற்றும் யுக்தி..!! முதலீட்டில் இப்படி ஒரு டெக்னிக் இருக்கா.
முதலீட்டில் இப்படி ஒரு டெக்னிக் இருக்கா

Lumpsum vs SIP: தற்போது லம்ப்சம்(Lumpsum) முதலீடுகள் லாபம் தருமா அல்லது எஸ் ஐபி முதலீடுகள் லாபம் தருமா என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம். இந்த உதாரணத்திற்காக நாம் 4 லட்சம் ரூபாயை எடுத்துக் கொள்ளப் போகிறோம். 4 லட்சம் ரூபாய் பணத்தை ஒரே முறையாக முதலீடு செய்வதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் நமக்கு எவ்வளவு பணம் கிடைக்கும்,

அதை மாதம் தோறும் பிரித்து எஸ்ஐபியாக முதலீடு செய்யும்போது அடுத்த 20 ஆண்டுகளில் எவ்வளவு பணம் நமக்கு கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். Lumpsum முதலீடு: 4 லட்சம் ரூபாய் பணத்தை ஆண்டுக்கு 12 சதவீத லாபம் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் ஒரே முறையாக லம்ப்சம் முறையில் முதலீடு செய்கிறோம் என வைத்து கொள்ளலாம். 20 ஆண்டுகள் கழித்து இந்த பணம் 38, 58, 517 ரூபாயாக உயர்வு கண்டிருக்கும்.

நீங்கள் செய்த 4 லட்சம் ரூபாய் முதலீடு 20 ஆண்டுகளில் உங்களுக்கு 34 , 58,517 ரூபாயை கூடுதல் வருமானமாக ஈட்டி தந்து இருக்கும். 21 ஆண்டுகள் கழித்து எடுத்தால் 4 லட்சம் ரூபாய் முதலீடு 40 லட்சமாக உயர்ந்திருக்கும்

எஸ்ஐபி: இதே 4 லட்சம் ரூபாயை 20 ஆண்டுகளுக்கு பிரித்து எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறோம் என வைத்துக்கொள்வோம்.4 லட்சம் ரூபாயை மாதந்தோறும் எஸ்ஐபி முறையில் பிரித்தால் 20 ஆண்டுகளுக்கு நாம் மாதந்தோறும் 1667 ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். 12 சதவீத ஆண்டு லாபம் தரக்கூடிய ஒரு நிதியில் நாம் முதலீடு செய்கிறோம் என்றால் 20 ஆண்டுகள் கழித்து நாம் செய்த மொத்த முதலீடு 4 லட்சம் ரூபாயாகவும் நமக்கு கிடைக்கக்கூடிய மொத்த பணம் 15,33,402 ரூபாயாகவும் இருக்கும்

ஏன் லம்ப்சம் முறையில் அதிக லாபம்?: லம்ப்சம் முறையில் கையில் இருக்கும் பணத்தை முதலீடு செய்து விடுகிறோம். அது காம்பவுண்டிங் முறையில் வளர்வதற்கு இருபது ஆண்டு காலத்தை தருகிறோம். இதனால் அந்த பணம் அதிகளவு வளர்ச்சி பெறுகிறது. அந்த 4 லட்சம் ரூபாயை எஸ்ஐபி முறையில் 20 ஆண்டுகளுக்கு பிரித்து முதலீடு செய்யும் போது அது 4 லட்சம் ரூபாய் என ஆவதற்கே 20 ஆண்டுகள் ஆகிவிடுகிறது .

காம்பவுண்டிங்: எனவே காம்பவுண்டிங் முறையில் பார்க்கும்போதும் லம்ப்சம் முறை முதலீடு நல்ல லாபம் தரக்கூடியதாக இருக்கிறது. ஆனால் ஒரு நபர் தன்னிடம் இருக்கும் பணத்தை எஸ்ஐபி முதலீடு செய்வதா அல்லது ஒரே முறை முதலீடாக செய்வதா என்பதை அவருடைய தற்போதைய நிதி நிலைமையும் எதிர்காலத்தில் அவருடைய நிதி சார்ந்த இலக்குகளும் தான் முடிவு செய்யும். ஸ்டெப் அப் எஸ்ஐபி: கையில் இருக்கும் மொத்த பணத்தையும் ஒரு முதலீட்டில் போட்டு விடுவது என்பது திடீரென அவசர காலத்திற்கு பணம் தேவைப்படும் போது உடனடியாக எடுக்க முடியாத சூழலை உண்டாக்கும் . அதே வேளையில் எஸ் ஐபி முறையில் முதலீடு செய்பவர்கள் ஆண்டுதோறும் அதனை 5 முதல் 10% வரை ஸ்டெப் அப் செய்யலாம்.

ஆண்டுதோறும் எஸ்ஐபி ஸ்டெப் அப் முறையில் உயர்த்தி கொண்டே வரும்போது அது நமக்கு கணிசமான லாபத்தை தரக்கூடியதாக அமையும். இதே உதாரணத்தில் மாதம் 1667 ரூபாயை எஸ்ஐபி செய்கிறோம் அதனை ஆண்டுக்கு 10% என ஸ்டெப் அப் செய்தால் 20 ஆண்டுகளில் நம் கையில் 31 லட்சம் ரூபாய் கிடைக்கும்.