மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: BLO, ஆசிரியர்கள், ஓய்வூதியதார்ரகளுக்கு அரசின் பரிசு

சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்புகள் வெளிவந்துள்ன. அவற்றை பற்றி இந்த பதிவில் காணலாம்.
State Government Employees Latest News: இன்னும் சில மாதங்களில் நாட்டின் பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவுள்ளன. இந்த மாநிலங்களில் இதற்கான அயத்தப்பணிகளும் முதற்கட்ட பிரச்சாரங்களும் தொடங்கியுள்ளன.
பீகார் சட்டமன்ற தேர்தல்
சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள மாநிலங்களில் ஒன்றான பீகாரில் நாளுக்கு நாள் மக்களை மகிழ்விக்கும் பல அறிவிப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அனைத்து பிரிவு மக்களையும் திருப்திப்படுத்துவதில் முழுமையாக ஈடுபட்டுள்ளார். மாநில அரசு தினம் தினம் பெரிய முடிவுகளை எடுத்து வருகின்றது. பல முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
Honorarium of BLOs: முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
- முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், சிறப்பு வாக்காளர் திருத்தப் பணிகளில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளான பூத் லெவல் அபீசர்களான (Booth Level Officers) BLO -க்கள் மற்றும் மேற்பார்வையாளர்களின் கௌரவ ஊதியம் குறித்து ஒரு முக்கியமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
- தேர்தல் ஆணையத்துடன் இணைந்து சுமூகமான தேர்தல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள தரைமட்ட ஊழியர்களுக்கு இந்த முடிவு ஒரு பெரிய நிவாரணமாக அமைந்துள்ளது.
இதன் கீழ், சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்காக 77,895 BLOக்கள் மற்றும் 8,245 BLO மேற்பார்வையாளர்களுக்கு ஆண்டு கௌரவ ஊதியத்துடன் கூடுதலாக ரூ.6000 மொத்த தொகையாக வழங்க ரூ.51 கோடியே 68 லட்சத்து 40 ஆயிரம் தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இது அவர்களின் அயராத முயற்சிகள் மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு பாராட்டாக பார்க்கப்படுகின்றது.
ஆசிரியர்களுக்கு அடித்த ஜாக்பாட்
- அரசு BLOக்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு மட்டுமல்ல, பிற முக்கிய ஊழியர்களுக்கும் ஒரு பரிசை வழங்கியுள்ளது.
- உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின் (முன்னர் நிதியில்லாத கல்விக் கொள்கையின் கீழ் இருந்தவை) ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, அவர்களின் சம்பளக் கொடுப்பனவுக்கு ரூ.3,944.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
- இதனுடன், இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் சிறந்த கல்விச் சூழலை உருவாக்குவதிலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
Bomb Disposal Squad: இந்த அரசு ஊழியர்களுக்கு 30% கூடுதல் கொடுப்பனவு
- இது தவிர, வெடிகுண்டு அகற்றும் படையின் பணியாளர்கள் தங்கள் அடிப்படை சம்பளத்தில் 30% மாதந்தோறும் ஆபத்து கொடுப்பனவாகப் பெறுவார்கள்.
- இது அவர்களின் அகவிலைப்படியிலிருந்து (DA) தனியாக இருக்கும்.
- இது அவர்களின் ஆபத்தான மற்றும் முக்கியமான பணியை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகின்றது.
Pensioners: ஓய்வூதியத்தில் சமீபத்திய அதிகரிப்பு
- ஜூன் மாத இறுதியில், முதல்வர் நிதிஷ் குமார் முதியோர், விதவைகள் மற்றும் ஊனமுற்றோர் ஓய்வூதியத்தில் அதிகரிப்பை அறிவித்தார்.
- அதன் பிறகு ஜூலை 11 அன்று ஓய்வூதியதாரர்களின் கணக்குகளுக்கு அதிகரித்த ஓய்வூதியத்திற்காக ரூ.1227 கோடி மாற்றப்பட்டது.
- இதன் கீழ், அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.400 க்கு பதிலாக ரூ.1100 அனுப்பப்பட்டது.
- இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையின் மூலம் 1 கோடியே 11 லட்சம் பயனாளிகள் நேரடிப் பயனைப் பெற்றனர்.
- பீகார் அரசு முதியோருக்கான முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஊனமுற்றோருக்கான ஊனமுற்றோர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் பெண்களுக்கான லட்சுமிபாய் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை நடத்தி வருகிறது.