பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிப்பது எப்படி.. தேனி கலெக்டர் விளக்கம்

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிப்பது எப்படி.. தேனி கலெக்டர் விளக்கம்
பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் ரஞ்ஜீத் சிங்

தேனி: பிரதமரின் பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று தேனி மாவட்ட விவசாயிகளுக்கு கலெக்டர் ரஞ்ஜீத் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் என்பது விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-26-ம் ஆண்டில் தேனி மாவட்டத்தில் காரீப், சம்பா மற்றும் ராபி பருவங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.

தேனி கலெக்டர் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், "பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் விவசாயிகளுக்கு இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2025-26-ம் ஆண்டில் தேனி மாவட்டத்தில் காரீப், சம்பா மற்றும் ராபி பருவங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அதன்படி நடப்பு ஆண்டில் மாவட்டத்தில் காரீப் பருவத்தில் நெல், மக்காச்சோளம், சோளம், நிலக்கடலை, எள், துவரை, பருத்தி, வாழை, வெங்காயம், தக்காளி, கத்தரி மற்றும் மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு 61 பிர்காக்கள், சம்பா பருவத்தில் நெற்பயிருக்கு 14 பிர்க்காக்கள் மற்றும் ராபி பருவத்தில் மக்காச்சோளம், வாழை, கத்தரி, முட்டைகோஸ், கொத்தமல்லி, தக்காளி ஆகிய பயிர்களுக்கு 27 பிர்க்காக்கள் அறிவிக்கை செய்யப்பட்டு அதன் கீழ் வரும் அனைத்து வருவாய் கிராமங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது

இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகள், அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டாயம் பிடித்தம் செய்து பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும், பொது சேவை மையங்கள் மூலமாகவும், விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம்.