மகளுக்கு சீர்வரிசை மூட்டை மூட்டையாக கிங்காங் தந்தாரா? சொந்த கார் கூட கிங் காங்கிடம் இல்லயே: பிரபலம்

மகளுக்கு சீர்வரிசை மூட்டை மூட்டையாக கிங்காங் தந்தாரா? சொந்த கார் கூட கிங் காங்கிடம் இல்லயே: பிரபலம்
சொந்த கார் கூட கிங் காங்கிடம் இல்லயே: பிரபலம்

சென்னை : கிங்காங் ஓரளவு விளம்பர பிரியர்.. அத்துடன் தன்னுடைய வீட்டில் நடக்கும் முதல் திருமணத்தில் அனைவரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார்.. இதற்காகவே அனைவருக்குமே பத்திரிகையை தேடி தேடி தந்தார்.. ஆனால் எதையும் எதிர்பார்த்து அவர் பத்திரிகையை வைக்கவில்லை. கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த கிங்காங் பற்றி, கற்பனைக்கு வந்ததை பேச வேண்டாம் என்று மூத்த பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Puthiya Sinthanai என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள பயில்வான் ரங்கநாதன், கிங்காங் சொந்த ஊர் வந்தவாசி.. மிகவும் கஷ்டப்பட்டு மேலே வந்த நபர்.. குள்ளமணி, தவக்களை போன்று சினிமாவில் வந்தவர்.. ஆனால், உயரம் குறைந்து, திருமணமாகி குழந்தைகள் பெற்ற ஒரே நடிகர் கிங்காங் மட்டுமே.. குள்ளமணி, தவக்களை போன்றோர் மது போதைக்கும் ஆளானார்கள்..

குள்ளமணி, தவக்களை

இத்தனைக்கும் குள்ளமணி ஜெய்சங்கர் சாரிடம் வேலை பார்த்தவர்.. தவக்களை பாக்யராஜ் சாரிடம் பணிபுரிந்தவர்.. அந்தவகையில், கலைப்புலி சேகரன் படத்தில் அறிமுகமானவர் கிங்காங்.. சங்கர் என்ற பெயரை மாற்றியவரும் கலைப்புலி சேகரன்தான்.

டான்ஸ் நன்றாக ஆடுவார் கிங்காங்.. தமிழகத்தின் அனைத்து கிராமங்களின் கோயில்களிலும் கிங்காங் நடத்தும் நிகழ்ச்சிகள் நடக்கும்.. வருடம் முழுக்க பிஸியாகவே இருப்பார்.. இப்படித்தான் அவர் கஷ்டப்பட்டு சம்பாதித்தார்.. தண்ணி அடிக்க மாட்டார்.. சிகரெட் பிடிக்க மாட்டார்.. எந்த வீண் செலவையும் செய்யாமல், பணத்தை சேர்த்து எம்ஜிஆர் நகரில் சொந்த வீடு வாங்கினார்.. 3 பிள்ளைகளையும் படிக்க வைத்தார்

300 படங்களுக்கு மேல் நடித்துள்ளதால், கன்னடம் தெலுங்கு உள்ளிட்ட மாநிலங்களில் கிங்காங்கை அனைவருக்குமே தெரியும்..

தமிழகம் முழுக்க ஆடல் பாடல், கச்சேரி நிகழ்ச்சிகளை நடத்துபவர்களுடன், தனிப்பட்ட முறையில் நல்ல நட்பு கொண்டிருப்பவர் கிங்காங்.. அதனால் சினிமாவில் வாய்ப்பு இல்லையென்றாலும், நிகழ்ச்சிகளை நடத்தி சொந்தமாகவே சம்பாதித்து கொள்வார்..

கிங்காங் மகள், மருமகன் இருவருமே நன்றாக படித்து பட்டம் பெற்றவர்கள்.. மணமகன் எல்ஐசியில் வேலை பார்ப்பதாக என்னிடம் சொன்னார்.. இந்த கல்யாணம் முழுக்கவே மணமகன் வீட்டார் செலவுதான்.. ரிசப்ஷன் மட்டுமே கிங்காங் செலவு செய்ததாக தெரிகிறது.. நட்சத்திர நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் கல்யாணத்திற்கு வந்திருந்தனர்.. காதல் சுகுமார், முத்துக்காளை, நாஞ்சில் விஜயன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

சீர்வரிசைகள் - வரவேற்புகள்

மொத்தத்தில் இந்த கல்யாணத்தை செய்ததே மணமகன் வீட்டினர்தான்.. ஆனால், "தன்னுடைய மகளுக்கு எடைக்கு எடை சீர்வரிசையை கிங்காங் தந்தார், , மூட்டை மூட்டையாய் மகளுக்கு தந்தார்.. திருமணத்தின்போது, ஹெலிகாப்டரிலிருந்து மணமகளுக்கு பூ தூவப்பட்டது" என்றெல்லாம் சோஷியல் மீடியாவில் செய்திகள் பரவுகின்றன

தயவுசெய்து யாரும் மிகைப்படுத்தி பேசாதீங்க.. அதுவும் பொய்யானதை பேசாதீங்க.. கிங்காங் வருமானம் அவரது செலவுகள் பற்றி எனக்கு ஓரளவு தெரியும்.. வீட்டில் முதல் திருமணம் என்பதால், அனைவருமே தன்னுடைய மகளை வாழ்த்த வேண்டும் என்று பத்திரிகை தந்து வந்தார்.. எதையும் எதிர்பார்த்து பத்திரிகை அவர் வைக்கவில்லை..

ஓவர் பில்டப்புகள்

இதுபோல செய்தி பரப்பும் யூடியூப் சேனல்கள், பில்டப் தருவதாக நினைத்து கொண்டு, ஆளையே கவிழ்த்து விட்டுவிடாதீர்கள். இப்படி பில்டப் தருவதால், திருமணத்துக்கு வருபவர்கள்கூட வராமல் போய்விடுவார்கள்.. தயவுசெய்து, கிங்காங்குக்கு ஆதரவாகவும், அனுசரணையாகவும் இருங்கள்..

நிறைய சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ளாதது குறித்து பலரும் வருத்தத்தை பதிவு செய்கிறார்கள்.. பத்திரிகை தரும்போதே சிலர் கிஃப்ட் தந்திருக்கலாம், அல்லது தனிப்பட்ட முறையில் மணமக்களை வாழ்த்த நினைத்திருக்கலாம்.

எனினும், ஸ்டேட்டஸ் பார்த்துதான் சில நடிகர், நடிகைகள் திருமணங்களில் பங்கேற்கிறார்கள்.. நடிகர், நடிகைகளில், A, B, C என்று பிரிவுகள் உண்டு.. இதில் 1 லட்சத்துக்கும் குறைவாக சம்பளம் வாங்குபவர்கள் C வகையறாக்கள்.

நாங்கள் எல்லாம் C வகையறாக்கள்.. சிறுக சிறுக சேமித்துதான், குடும்பத்தை பார்த்து கொள்கிறோம். நானாவது சொந்தமாக கார் வைத்திருக்கிறேன். கிங்காங் கார் எதுவும் வைத்திருக்கவில்லை.. எங்கே போனாலும் ஆட்டோவில்தான் போவார்.. எனவே, தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள்' என்று கேட்டுக் கொண்டுள்ளார்

.