பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு

பாகிஸ்தானுக்கு கவலையை அதிகரிக்கச்செய்யும் வகையில், இந்தியா க்வார் அணையை விரைவில் கட்டிமுடிக்க முடிக்க தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை (IWT) இடைநிறுத்திய பின்னர், இந்தியா தற்போது ஜம்மு & காஷ்மீரில் உள்ள சினாப் ஆற்றின் குறுக்கே க்வார் (Kwar) அணையின் கட்டுமானத்தை வேகமாக முடிக்க ரூ.3,119 கோடி கடனுக்கான நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
க்வார் (Kwar) அணையின் மொத்த திட்ட செலவு ரூ.4,526 கோடியாகும்.
News18 அறிக்கையின் படி, 540 மெகாவாட் திறன் கொண்ட இந்த ஹைட்ரோ எலக்டிரிக் திட்டத்திற்கு தேவையான கடன் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் பெற்றுத் தர நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
சினாப் ஆற்றின் திசைமாற்றம் ஜனவரி 2024ல் முடிக்கப்பட்டது. இது அணை அமைக்கும் பகுதிக்கு நீரைத் திசை மாற்றுவதில் உதவியாக இருந்து, தோண்டும் பணிகளை விரைவுபடுத்தியுள்ளது.
வளர்ச்சிக்கும், ஆற்றல் தேவைக்கும் தூணாக அமையும்
முதலமைச்சர் நரேந்திர மோடி 2022 ஏப்ரல் 24-ல் இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். 2026 மே மாதத்தில் முழுமையாக செயல்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அணை முடிவடையும் போது, இந்தியாவின் மின் உற்பத்தி திறனை அதிகரிப்பதோடு, சுத்த ஆற்றல் நோக்கிற்கும் முக்கிய பங்களிப்பாக அமையும். ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் வேலைவாய்ப்பும் உள்கட்டமைப்பு மேம்பாடும் இதன்மூலம் கிட்டும்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
109 மீ உயரமுள்ள concrete gravity அணை
5.65 மீ விட்டமுள்ள 4 குழாய்கள் மூலம் நீர் வழியனுப்பு
அடித்தளத்தில் உள்ள பவர் ஹவுஸில் 135 மெகாவாட் திறன் கொண்ட 4 பிரான்சிஸ் டர்பைன் யூனிட்கள்