ஏஐ ஆபத்து நாளுக்கு நாள் அதிகரிக்குது.. தாங்கள் உருவாக்கிய ஏஐயே.. தங்களின் வேலையை பறித்த ஷாக்

ஏஐ ஆபத்து நாளுக்கு நாள் அதிகரிக்குது.. தாங்கள் உருவாக்கிய ஏஐயே.. தங்களின் வேலையை பறித்த ஷாக்
உருவாக்கிய ஏஐயே..

சென்னை: மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கீழ் பிரபல விளையாட்டு நிறுவனமான கேண்டி கிரஷ் தயாரிப்பாளர்களான கிங் நிறுவனத்தில் சுமார் 200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு கருவிகளே அவர்களை வேலையிலிருந்து நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது கேமிங் பிரிவில் பெரிய மாற்றங்களைச் செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக எக்ஸ்பாக்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இப்போது, கிங் நிறுவனத்திலும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் ஆதிக்கம் செலுத்துவதால் மனிதர்களின் வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்கவும், பயிற்சி அளிக்கவும் பல வருடங்கள் செலவிட்ட வடிவமைப்பாளர்கள், பயனர் ஆய்வாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் போன்றோரே தற்போது வேலையிலிருந்து நீக்கப்படுகிறார்கள். அதாவது அவர்கள் உருவாக்கிய ஏஐயை வைத்தே அவர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளனர். லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஃபார்ம் ஹீரோஸ் சாகா குழுவில் இருந்து சுமார் 50 பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இது அந்த அணியின் பாதி எண்ணிக்கை ஆகும். மேலும் முக்கிய தலைமைப் பதவிகளும் இதில் அடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கிங் நிறுவன ஊழியர் ஒருவர் கூறுகையில், "கேம்களை வடிவமைக்கும் பணி கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது. ஏனென்றால், மனிதர்கள் செய்யும் பணிகளை ஏஐ வேகமாக செய்கிறது. இதனால் மனிதர்கள் உருவாக்கிய ஏஐயை வைத்தே எங்கள் ஊழியர்களை நீக்கி வருகின்றனர்" என்றுள்ளார். ஏஐ வருகை காரணமாக 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,00,000க்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. மென்பொருள் பொறியியல் (Software Engineering), மனிதவள மேம்பாடு (Human Resource), துறையில் அதிக வேலை இழப்புகள் ஏற்பட்டு உள்ளதாக ஆய்வு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பத் துறையில் செயற்கை நுண்ணறிவின் (Artificial Intelligence - AI) தாக்கம் அதிகரித்து வருவதால், வேலை வாய்ப்புகள் குறைந்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு காலத்தில் புதுமையின் பிறப்பிடமாகவும், நிலையான வேலை வாய்ப்புகளை வழங்கும் துறையாகவும் இருந்த தொழில்நுட்பத் துறை, தற்போது செயற்கை நுண்ணறிவால் பெரும் மாற்றத்தை சந்தித்து வருகிறது. திறமையான நிபுணர்களின் இடத்தை செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமித்து வருவதால், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து எதிர்காலம் குறித்த கவலையில் உள்ளனர்

வேலை இழப்புக்குக் காரணமான செயற்கை நுண்ணறிவு

ஃபியூச்சரிஸம் (Futurism) ஊடகத்தின் அறிக்கையின்படி, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பல, திறமையான நிபுணர்கள் செய்து வந்த வேலைகளை தானியங்கி முறையில் செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. இதன் காரணமாக, 2025 ஆம் ஆண்டில் மட்டும் 1,00,000க்கும் அதிகமான தொழில்நுட்ப வேலைகள் நீக்கப்பட்டுள்ளன. மென்பொருள் பொறியியல் (Software Engineering), மனிதவள மேம்பாடு (Human Resource), மற்றும் கிரியேட்டிவ் துறைகளில் (Creative sectors) கூட, குறைந்த செலவில் அதிக செயல்திறனை வழங்கும் அல்காரிதம்கள் (Algorithms) மற்றும் இயந்திர கற்றல் (Machine learning) முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதனால் அந்த துறைகளில் அதிக அளவில் வேலை இழப்புகள் ஏற்பட்டு உள்ளன..

ஏஐ மூலம் ஏற்படும் பணி இழப்பு

பிரபல ஐடி நிறுவனமான ஐபிஎம் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. மேலும் பெரும்பாலான வேலை நீக்கங்கள் வரும் நாட்களில் செய்யப்படும் என்று நிறுவனத்தின் மனிதவள (HR) துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆட்டோமேஷன் காரணமாக.. அதாவது ஏஐ காரணமாக ஐபிஎம் 200 பணியாளர்களை தொடக்கத்தில் நீக்கியது. எச் ஆர் துறையிலும் பல நூறு பேரை நீக்கியது. முக்கியமாக எச்.ஆர் பணிகள், மெயில் அனுப்புதல், சம்பளம், வரி போன்றவற்றை கணக்கிடும் பணிகள் எல்லாம் ஏஐகளிடம் விடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

அடிப்படையில், ஒரு காலத்தில் மனிதர்களால் கையாளப்பட்ட வேலையை இப்போது AI செய்வதால், பல பணிகள் மெதுவாக நீக்கப்படுகின்றன. மனிதர்களின் நேரடி, தினசரி ஈடுபாடு இல்லாத வேலைகள் அனைத்தையும் ஐபிஎம் நிறுவனம் ஏஐ வைத்து மாற்ற முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக உலகம் முழுக்க ஐபிஎம் சுமார் 8,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.