2,340 ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை- அமைச்சர் தகவல்

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும்.
கள்ளக்குறிச்சி:
பழைய ஓய்வூதிய திட்டம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,340 ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 2,340 ஆசிரியர் பணியிடங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைகளை வழங்குவார். பகுதிநேர ஆசிரியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும் என்றார்.