கரூர் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் பொதுமக்களுக்கு அன்பளிப்பாக விநாயகர் சிலைகள் வழங்கும் விழா

Karur All India Hindu Temples Protection Society presents Ganesha idols to the public

கரூர் அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் பொதுமக்களுக்கு அன்பளிப்பாக விநாயகர் சிலைகள் வழங்கும் விழா

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கத்தின் சங்கம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியாவிலேயே முதன் முறையாக பொதுமக்களுக்கு அன்பளிப்பாக களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் வழங்கும் நிகழ்வு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதே போல் இந்த ஆண்டும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கரூர் மாவட்டம் குளித்தலை ஆண்டார் வீதியில் உள்ள ஶ்ரீ தண்டாயுதபாணி திருக்கோயிலில் பொது மக்களுக்கு அன்பளிப்பாக களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டது.விநாயகர் சிலைகளை பெற்று கொண்ட பொதுமக்கள் மகிழ்ச்சியோடு சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்து சென்றனர்.மேலும் குடிசை பகுதியில் வாழும் பொதுமக்களின் வீடுகளுக்கும் சென்று சங்கத்தின் பொறுப்பாளர்கள் விநாயகர் சிலைகளை வழங்கினர்.

விநாயகர் சிலைகளை பெற்று கொண்ட அவர்கள் எங்களின் வீட்டிற்கே விநாயகர் சிலைகளை கொண்டு வந்து தந்த சங்கத்தினருக்கு மிகவும் மகிழ்ச்சியோடு நன்றிகளை தெரிவித்து பாராட்டினர்.இதில் சிறப்பு விருந்தினராக பாஜக நகர தலைவர் கணேசன் அவர்கள் கலந்து கொண்டார்.இந்த விழா ஏற்பாட்டை சங்கத்தின் தேசிய தலைவர் அருள்வேலன் ஜி அவர்களின் ஆலோசனையின் படி கரூர் மாவட்ட பொறுப்பாளர் கருணாநிதி தலைமையில் பொறுப்பாளர்கள் மதியழகன் , பூசாரி ரவி ,முரளி , கல்யாண வெங்கட்ராமன் , திருமுருகன் ,சரவணன் , ஆனந்த் ,செந்தில் மற்றும் பலர் ஏற்பாடு செய்திருந்தனர்.