பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடி நிவாரண உதவிகள் வழங்கிய நிகழ்வு

பெரும் கனமழையால் பாதிப்படைந்த தென்தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலிமற்றும் அதன் சுற்றியுள்ள கிராமபுற மக்களுக்கு நேரடியாக நிவாரண உதவிகள்

பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் கனமழையால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு நேரடி நிவாரண உதவிகள் வழங்கிய நிகழ்வு

 கோவை உடையாம்பாளையம் பாரதமாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் பெரும் கனமழையால் பாதிப்படைந்த தென்தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமபுற மக்களுக்கு நேரடியாக நிவாரண உதவிகள்* (23-12-2023-24-12-2023-25-12-2023) என மூன்று நாட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் அவர்களுக்கு தேவையான உணவு, உடை, அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் தற்போதைய அத்தியாவசிய பொருட்களான பால் பவுடர் ,போர்வை,துண்டுகள், மெழுகுவர்த்தி, பிரட் , பிஸ்கட், நாப்கின், சோப் உள்ளிட்ட பொருட்களை நேரடியாக கொண்டு சென்று வழங்கி அவர்களின் துயரங்களில் பங்கு கொண்டது பாரத மாதா. முன்னதாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேரிடர் மீட்பு குழுவை சார்ந்த காவல்துறை அதிகாரிகள் -அரசு அதிகாரிகள் -பேருந்து ஓட்டுனர்கள் -மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் உள்ளிட்ட  300- க்கும் மேற்பட்டவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாரதமாதா நற்பணி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் M.கௌரிசங்கர் தலைமையில் M.கார்த்திக், S.ராஜா K.சரவணன், பிரபு, மெய்யரசன், சுஜன், பிரவீன், சுரேஷ், சக்தி மாதவன், தினேஷ்குமார், டார்வின், குணசேகரன், இளங்கோ, திலீப் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை நேரடியாக வழங்கி உதவினார்கள்.

 ஒரு மனிதனின் துயரமான நேரத்தில் தோள் கொடுப்பதை விட உயர்ந்த சேவை வேறு எதுவும் இல்லை