வருகின்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தலில் பா.ஜ.க.~ விற்கு ஹிந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு

Hindu Sena National Movement supports BJP in forthcoming Tamil Nadu urban local body elections

வருகின்ற தமிழக நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தலில் பா.ஜ.க.~ விற்கு ஹிந்து சேனா தேசிய பேரியக்கம் ஆதரவு

தமிழகத்தில் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி  தேர்தலில் தனித்துப் போட்டியிடும்  பா.ஜ.க.விற்கு புது டெல்லியை தலைமையிடமாக கொண்டு தமிழகத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு சமூக நலப்பணிகளை மிக சிறப்பாக செய்து வருகின்ற ஹிந்து சேனா தேசிய பேரியக்கம் புது டெல்லி தலைமையின் ஆலோசனையின் படியும் , மாநில செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின் படியும்    தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலம் கமலாலயத்தில் மாநில தலைவர் திரு.அண்ணாமலை ஜி  அவர்களிடம்  முழு ஆதரவை தெரிவித்து ஆதரவு கடிதத்தை ஹிந்து சேனா இயக்கத்தின் பொறுப்பாளர்கள் வழங்கினர்.ஹிந்து சேனா தேசிய பேரியக்கத்தின் தமிழகத்தின்  மாநில தலைவர் அருள்வேலன் ஜி பேசிய போது பாரத பிரதமர் மோடி ஜி அவர்களின் தலைமையிலான மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில மக்களுக்கும் பல்வேறு வகையான சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.மேலும் மத்திய அரசு தமிழகத்தில் மக்களின் தேவைகள் அறிந்து பல திட்டங்களை செயல்படுத்தி அதனை தொடர்ந்து நிறைவேற்றி வருகின்றது. எனவே தனித்து களம் காணும்

பா.ஜ.க.விற்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு , அனைத்து மாநகராட்சி  , நகராட்சி , பேரூராட்சிகளில் பா.ஜ.க~விற்கு எங்கள் ஹிந்து சேனா இயக்கத்தின் பொறுப்பாளர்கள் பல்வேறு வகையான களப்பணியாற்றி பா.ஐ.க~ வை சார்ந்த அனைத்து  வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்வோம் என தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.இந்த நிகழ்வில் மாநில செயலாளர் செல்வகுமார்  மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் சுதாகர் , கொறுக்குபேட்டை.தனசேகர் , வடபழனி.கோபி , ராஜேந்திரன் , குளத்தூர்.ஶ்ரீநிவாஸராவ் , பெரம்பூர்.பழனிநாதன் , வானோலி , மணிராஜ்  , மகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.*