பஸ் ஸ்டாண்டு உள்ளே போய்.. வெளியே வரப்போகும் ரோப் கார்..

பஸ் ஸ்டாண்டு உள்ளே போய்.. வெளியே வரப்போகும் ரோப் கார்..
அண்ணாந்து பார்க்க போறீங்க.. எங்கே தெரியுமா?

சென்னை: சென்னையில், மாநில அரசு இந்த ஆண்டு வெளியிட்ட பட்ஜெட் அறிவிப்பைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ரோப் கார் அமைப்பதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. இதன்படி, யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான மகாபலிபுரம் மற்றும் ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைவாசஸ்தலங்களில் ரோப்வே அடிப்படையிலான போக்குவரத்து முறையை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய ஆலோசகர்களை நியமிக்கும் பணியை CMRL தொடங்கியுள்ளது

மகாபலிபுரத்தில் ஆய்வு செய்யப்படவுள்ள திட்டத்தின்படி, புதிதாக கட்டப்படவுள்ள பேருந்து நிலையத்திலிருந்து புகழ்பெற்ற கடற்கரை கோயில் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ரோப் கார் மூலம் வான்வழி இணைப்பு ஏற்படுத்தப்படும். அதாவது பேருந்து நிலையத்தில் தொடங்கி கடற்கரை கோவில் வரை இந்த ரோப் கார் செல்லும். சுற்றுலாத் தலங்களில் அதிக உயரத்தில் கேபிள் மூலம் இயக்கப்படும் போக்குவரத்து முறைகளை ஆராயும் மாநில அரசின் முயற்சி இதுவாகும்..

இது தொடர்பாக ஆலோசகர்கள் நியமிக்க டெண்டர்களை CMRL ஏற்கனவே வெளியிட்டுள்ளது. மகாபலிபுரம் மட்டுமின்றி, சென்னையின் தகவல் தொழில்நுட்ப பூங்கா மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலையில் (ECR) இரண்டு ரோப்வே பிரிவுகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தரமணி MRTS நிலையத்திலிருந்து கந்தன்சாவடி மெட்ரோ வரை 1.7 கி.மீ தூரமும், கந்தன்சாவடியிலிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாலவாக்கம் வரை 1.0 கி.மீ தூரமும் ரோப்வே அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது..

இருப்பினும், இந்த திட்டங்கள் எப்போது செயல்படுத்தப்படும் என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு அரசின் இந்த முயற்சி, ஹிமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளைப் பின்பற்றி எடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மகாபலிபுரத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானம் கிட்டத்தட்ட 60% நிறைவு பெற்றுள்ளது. இந்த வருட இறுதியில் இந்த பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...

மகாபலிபுரத்தில் பல்லவ கட்டுமான கலையை பிரதிபலிக்கும் விதமாக, தென் மாவட்ட பயணிகளின் வசதிக்காக பிரம்மாண்ட பேருந்து நிலையம் வர உள்ளது..

மகாபலிபுரத்தில் ஏன் பேருந்து நிலையம்

தென் தமிழ்நாட்டிற்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்களின் வசதிக்காகவேஈ கோயம்பேடு பேருந்து நிலையம் (ஈசிஆர் வழி செல்லும் பேருந்துகள் மட்டும்), கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், தாம்பரம் புறநகர் பேருந்து நிலையங்கள் உள்ளன. ஆனாலும் கோயம்பேடு பேருந்து நிலையம் இடிக்கப்பட உள்ளதால் கோயம்பேடு பேருந்து நிலையம் மூடப்படும்.

இப்படிப்பட்ட நிலையில்தான் ஈசிஆரில் இன்னொரு பேருந்து நிலையத்தை பிரம்மாண்டமாக கட்ட முடிவு செய்துள்ளனர். மாமல்லபுரம் நகருக்கு வெளியே ECR இல் அமைய உள்ள இந்த புதிய பேருந்து முனையத்தை நிர்மாணிப்பதற்கான டெண்டரை CMDA வெளியிட்டு, ஒப்பந்ததாரரை இறுதி செய்துள்ளது...

மாமல்லபுரத்தில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடத்தில் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இதை மாற்ற முடிவு செய்துள்ளோம் என்று கூறியுள்ளார். ஆகஸ்ட் மாதம் புதிய பேருந்து நிலையத்தின் இடத்தைப் பார்வையிட்ட சேகர்பாபு, பயணிகளுக்கு எளிமையான பயண அனுபவத்தை அளிக்கும் வகையில் நவீன வசதிகளுடன் புதிய பேருந்து நிலையத்தை கட்டுவோம் என்று கூறியுள்ளார்.

எவ்வளவு பெரியது

அதன்படி 6.79 ஏக்கரில் 27,500 சதுர மீட்டர் பரப்பளவில் மொத்தம் ₹67 கோடி செலவில் புதிய பஸ் டெர்மினஸ் திட்டம் தொடங்கப்படும் என சிஎம்டிஏ தரப்பு தெரிவித்துள்ளது. இரண்டு மாடி கொண்ட பேருந்து முனையத்தில் இரு சக்கர வாகனம் மற்றும் கார் பார்க்கிங், தரைத்தள கடைகள், டிக்கெட் கவுன்டர்கள் மற்றும் காத்திருப்பு அறைகள் மற்றும் முதல் தளத்தில் அலுவலக அறைகள், தங்குமிடங்கள், பணியாளர்கள் ஓய்வு அறை மற்றும் கட்டுப்பாட்டு அறை ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது...

சாட்டிலைட் சிட்டி: சென்னைக்கு அருகே ஆறாவது புதிய நகரமாக (செயற்கைக்கோள் நகரம்) மகாபலிபுரம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் கீழ் மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி சார்பாக இங்கே உயர்த்தப்பட உள்ள கிராமங்களின் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, வளவந்தாங்கல், சந்தானம்பட்டு, நெம்மேலி, கிருஷ்ணங்கரணை, திருப்போரூர், சலுவன்குப்பம், பட்டிப்புலம், தண்டலம், வெங்கலேரி, ஆலத்தூர், கருங்குழிப்பள்ளம், பையனூர், சிறுதாவூர், அதிகமநல்லூர், காரணை, பஞ்சானந்தூர், அமஞ்சான்பட்டி, அமஞ்சான்பட்டி, அமமுகநல்லூர், அமமுகநல்லூர், தஞ்சைநல்லுார், ஆகிய வருவாய் கிராமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. , கொக்கிலிமேடு, மகாபலிபுரம், பூஞ்சேரி, காடம்பாடி, மற்றும் பெருமளேரி-வடகடம்பாடி-நல்லான்பிள்ளைப்பெற்றல் ஆகிய 25 கிராமங்கள் உயர்த்தப்பட உள்ளன...