என் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டேன்! காரணம் இதுதான்! அந்த வலி எனக்கு தெரியும்! சரத்குமார் உருக்கம்

என் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டேன்! காரணம் இதுதான்! அந்த வலி எனக்கு தெரியும்! சரத்குமார் உருக்கம்
என் சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டேன்! காரணம் இதுதான்

சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான சரத்குமார் இன்று தன்னுடைய 71 வது பிறந்தநாளை கொண்டாடிவ

ரும் நிலையில் சமீபத்தில் அவர் கொடுத்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் தான் வாழ்ந்து வரும் வீட்டை வாடகைக்கு கொடுத்தது குறித்து சரத்குமார் பேசியிருக்கிறார். சமீபத்தில் அவர் 3BHk திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருக்கும் நிலையில் வாடகை வீடு குறித்து தன்னுடைய அனுபவத்தையும் பகிர்ந்து இருக்கிறார்.

90ஸ் கிட்ஸ்களில் ஃபேவரைட் கதாநாயகர்களின் ஒருவரான சரத்குமார் அந்த நேரத்தில் நடித்த நாட்டாமை, சூரிய வம்சம், நட்புக்காக போன்ற படங்கள் இப்போதும் பலரும் விரும்பி பார்க்கும் வரிசையில் இடம் பிடித்திருக்கிறது. இந்த திரைப்படங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் போது ஏதோ முதல் முறை பார்ப்பது போலவே பலரும் பார்த்து வருகிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனதில் தன்னுடைய நடிப்பால் தனக்கென ஒரு இடத்தை பிடித்த சரத்குமார் இப்போதும் கதாநாயகனாக தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்

சமீபத்தில் அவர் நடித்த 3BHk திரைப்படம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் சென்னையில் வாழும் ஒரு நடுத்தர வர்க்கத்து குடும்பத்தினரின் சொந்த வீடு கனவு பற்றியே இருந்து வருகிறது. இந்த திரைப்படத்தில் சரத்குமார் நடிக்கவில்லை என்றும் அந்த கேரக்டர் ஆகவே வாழ்ந்து இருக்கிறார் என்றும் பலரும் பாராட்டி வருகிறார்கள். ஆனால் சரத்குமாருக்கு ஆரம்பத்தில் சினிமா வாய்ப்பு அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடவில்லை

சினிமாவில் முன்னுக்கு வர பல்வேறு கஷ்டங்களை சந்தித்திருக்கிறார். படிப்படியாகத்தான் முன்னேறி இப்போது டாப் ஹீரோவாக வளர்ந்து வருகிறார். அதுபோல சரத்குமாரின் அப்பா ஆல் இந்தியா ரேடியோவில் வேலை பார்த்து இருக்கிறார். சரத்குமாருக்கு அப்போதே பிட்னஸில் அதிக ஆர்வம் அதனால் தன்னுடைய 20 வயதிலேயே மிஸ்டர் மெட்ராஸ் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றிருக்கிறார். ஆனாலும் அவருக்கு சரியான வேலை வாய்ப்பு எதுவும் கிடைக்காததால் அவர் அந்த நேரத்தில் பேப்பர் போடும் வேலை பார்த்து இருக்கிறார்.

பிறகு படிப்படியாகத்தான் நாளிதழில் பத்திரிக்கையாளராக பணியாற்றி இருக்கிறார். அதற்குப் பிறகு சின்ன சின்ன வேடங்களில் சினிமாவில் அறிமுகமாகி சூரியன் திரைப்படத்தில் மாஸ் ஹீரோவாக மாறி இருந்தார். தமிழ் சினிமாவில் இப்போதும் இவருக்கு வயதே ஆகாதா? என்று வியந்து பார்க்கும் அளவிற்கு சரத்குமார் தன்னுடைய உடலை பேணி பாதுகாத்து வருகிறார். இந்த நிலையில் இன்று அவருடைய 71 வது பிறந்த நாளுக்கு அவருக்கு பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்

.அதே நேரத்தில் சரத்குமார் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அப்போது தான் வாழ்ந்து வரும் வீட்டை வாடகைக்கு கொடுத்தது எதனால் என்பது பற்றி பேசி இருந்தார். அதில் அவர் பேசும்போது ஒரு வீடு விற்பதும் வாங்குவது எல்லாருடைய ஆசை பாசம்தான். என்ன பொறுத்த வரைக்கும் நான் இப்போ வீட்டை கொடுத்து இருக்கிறேன். எங்க வீட்டில் நானும் ராதிகாவும் மட்டும் தான் இப்போ இருக்கிறோம். என்னுடைய பையன் வெளிநாட்டில் படித்துக்கொண்டு இருக்கிறேன். மூன்று பிள்ளைகளும் அவங்க அவங்க தனியா இருக்காங்க. நாங்க ரெண்டு பேரு மட்டும் இருந்தாலும் எங்க வீட்டில் இருக்கும் 7 கதவையும் பூட்ட வேண்டும்.

ஒவ்வொரு நாளும் நான் கதவை பூட்டனும் இல்லனா ராதிகா பூட்டனும், அந்த வீடு 450 முதல் 500 ஸ்கொயர் பீட்டில் கட்டப்பட்ட வீடு. அதனால் அதை கவனிக்கறது ரொம்ப கஷ்டம் இரவு நான் எங்கே இருந்தாலும் என்ன பண்ணுறீங்க வீட்டு கதவை பூட்டியாச்சா என்று கேட்க வேண்டியது இருக்கிறது. அதேபோல ராதிகா என்னிடம் கேட்க வேண்டியது இருக்கு. அதனால என்னுடைய வீட்டை வாடகைக்கு கொடுத்து இருக்கிறேன். கீழ் போஷனை இப்போ ஒரு ஐடி கம்பெனிக்கு கொடுத்து இருக்கிறோம். நாங்க மேல் போர்ஷனில் இருக்கிறோம் அவ்வளவுதான். ஆரம்பத்தில் சொந்த வீடு இல்லாம அவ்வளவு கஷ்டப்பட்டோம் ஒவ்வொரு மாதமும் வீடு மாத்துற மாதிரி கூட நிலைமை இருந்தது. ஆனால் இப்போ நம்முடைய வீட்டை பராமரிக்க முடியாமல் வாடகைக்கு கொடுத்து இருக்கிறோம் அவ்வளவுதான் என்று அந்த பேட்டியில் சரத்குமார் பேசியிருக்கிறார்.