இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்: சுருதிஹாசன் பேச்சு

கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது.
இதில் பேசிய சுருதிஹாசன், லோகேஷ் அமைதியாக செயல்படக்கூடிய ஒரு இயக்குனர் என்றார்.
சென்னை:
கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகை சுருதிஹாசன் பேசியதாவது:
இந்த நாள் என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாள். ரஜினி (சாரு)க்கு நன்றி.
கூலி படத்தில் சத்யராஜின் மகளாக நடித்திருக்கிறேன். இதில் எனக்கு ப்ரீத்தி என்ற கேரக்டரை கொடுத்ததற்கு நன்றி.
என் அப்பாவுக்கு விக்ரம் படத்தைக் கொடுத்ததற்கு நன்றி.
அந்தப் படத்தில் இருந்து நான் உங்கள் (லோகேஷ்) ரசிகையாகி விட்டேன்.
லோகேஷ் அமைதியாக செயல்படக்கூடிய ஒரு இயக்குனர்.
அமீர்கானுடன் நடித்ததும் பெருமையாக இருக்கிறது.
அனிருத்தின் இளமைக் காலத்திலிருந்து அவரை பார்த்துவருகிறேன். உங்களுடைய ஸ்பெஷலான பின்னணி இசை படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்கிறது என தெரிவித்தார்.