மீண்டும் ‘சாரி’ சொல்லப் போகிறாரா முதல்வர்? - அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

மீண்டும் ‘சாரி’ சொல்லப் போகிறாரா முதல்வர்? - அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்
மீண்டும் ‘சாரி’ சொல்லப் போகிறாரா முதல்வர்? - அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை: உடுமலைப்​பேட்​டை​யில் விசா​ரணைக்கு அழைத்து செல்​லப்​பட்​ட​வர் உயி​ரிழந்த சம்​பவத்​தில், மீண்​டுமொரு முறை ‘சா​ரி’ சொல்லி முதல்​வர் ஸ்டா​லின் முடித்​து​ விட போகிறாரா என அரசி​யல் தலை​வர்​கள் கண்​டனம் தெரி​வித்​துள்​ளனர்.

பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: திருப்​பூர் மாவட்​ டம் உடுமலைப்​பேட்டை வனச்​சரகர் அலு​வல​கத்​துக்கு விசா​ரணைக்​காக அழைத்​துச் செல்​லப் ​பட்ட பழங்​குடி​யினர் கிராமத்​தைச் சேர்ந்த மாரி​முத்து என்​பவர் மர்​ம​ மான முறை​யில் உயி​ரிழந்​துள்ள சம்​பவம் கடும் அதிர்ச்​சி​யளிக்​கிறது. சில நாட்​களுக்கு முன்பு காவல் துறை​யின​ரால் அநி​யாய​மாக அடித்​துக் கொல்​லப்​பட்ட அஜித்​கு​மாரின் மரணச் சுவடு மறை​யும் முன்​னரே மீண்​டும் அதே பாணி​யில் அடுத்த அப்​பா​வி​யின் உயிர் பறிக்​கப்​பட்​டிருக்​கிறதோ என்ற சந்​தேகம் மக்​கள் மனதில் வலு​வடை​யத் தொடங்​கி​ யுள்​ளது. மீண்​டுமொரு முறை “சா​ரி” சொல்லி முடித்​து​விடப் போகிறா​ரா ஸ்டா​லின்?

அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன்: திருப்​புவனம் அருகே கோயில் காவலாளி அஜித்​கு​மாரை, காவல் விசா​ரணை எனும் பெயரில் அடித்​துக் கொலை செய்​யப்​பட்ட சம்​பவம் ஏற்​படுத்​திய அதிர்​வலைகள் அடங்​கும் முன்​பாகவே, உடுமலை அருகே நடை​பெற்​றி ருக்​கும் இச்​சம்​பவம் தமிழகத்​தில் சட்​டத்​தின் ஆட்சி தான் நடை​பெறுகிறதா என்ற கேள்​வியை எழுப்​பு​கிறது. விசா​ரணை எனும் பெயரில் இன்​னும் எத்​தனை உயிரைப் பறிக்​கத் திட்​ட​மிட்​டிருக்​கிறது திமுக அரசு?

தமிழ்​நாடு மலை​வாழ் மக்​கள் சங்க மாநிலத் தலை​வர் டில்​லி​பாபு: விசா​ரணைக்​காக அழைத்​துச் செல்​லப்​பட்ட மாரி​முத்து வனச்​ சரக அலு​வல​கத்​தில் மர்​ம​மான முறை​யில் உயி​ரிழந்த சம்​பவம் பழங்​குடி மக்​கள் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​ யுள்​ளது. மாரி​முத்து மீது புனையப்​பட்ட பொய் வழக்​கில் அவரை விடு​தலை செய்​த​தால் வனத்​துறை​யினர் ஆத்​திரத்​தில் அவரை தாக்கி கொலை செய்​துள்​ளனர். வனத்​துறை​யின் இந்த திட்​ட​மிட்ட கொலையை தமிழ்​நாடு மலை​வாழ்​ மக்​கள்​ சங்​கம்​ வன்​மை​யாக கண்​டிக்​கின்​றோம்.