நான் வியர்வை சிந்தி உரு​வாக்​கிய கட்சி பாமக; யாரும் உரிமை கோர முடி​யாது” - ராமதாஸ்

நான் வியர்வை சிந்தி உரு​வாக்​கிய கட்சி பாமக; யாரும் உரிமை கோர முடி​யாது” - ராமதாஸ்
ராமதாஸ்

சென்னை: 96 ஆயிரம் கிராமங்​களுக்​குச் சென்​று, நான் வியர்வை சிந்தி உழைத்து உரு​வாக்​கிய கட்சி பாமக. இதற்கு வேறு யாரும் உரிமை கோர முடி​யாது என்று கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களிடம் ராமதாஸ் கூறிய தாவது: உலகத்திலேயே தந்தையை வேவு பார்த்த பிள்ளை இருக்கிறாரா என்றால் இருக்கிறார். என்னை அதுபோல் வேவு பார்த்திருக் கிறார்கள். வேறு யார் வைத்திருக்க முடியும். இது குறித்து காவல் துறை யிடமும், சைபர் குற்றப்பிரிவு போலீ ஸாரிடமும் புகார் கொடுத்துள்ளோம். அந்தக் கருவியையும் காவல் துறை யிடம் ஒப்படைத் துள்ளோம். மேலும், நான் தனியாக சிறப்பு அமைப்பு மூல மாகவும் விசாரணை நடத்தச் சொல்லி யுள்ளேன். அவர்களும் விரைவில் அறிக்கை கொடுப்பார்கள்.

ஒவ்வொரு முறையும் ஒரு பொய்யை அன்புமணி சொல்கிறார். தேர்தல் நெருங்குவதால், கட்சியை பலப்படுத்த பாமகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத் துக்கு நான் ஏற் பாடு செய்து, அதில் பங்கேற்க 108 மாவட்டச் செயலாளர் களுக்கு அழைப்பு விடுத்தேன். ஆ​னால், 100 மாவட்​டச் செய​லா​ளர் களை அன்​புமணி போனில் அழைத்​து, கூட்​டத்​துக்கு போகவேண்​டாம் எனச் சொல்லி நிறுத்​தி​னார். என்னை சந்​திக் கக் கூடாது என சொல்ல யாருக்​கும் அதி​காரம் கிடை​யாது.

96 ஆயிரம் கிராமங்​களுக்​குச் சென்​று, நான் வியர்வை சிந்தி உழைத்து உரு​வாக்​கிய கட்சி பாமக. இதற்கு வேறு யாரும் உரிமை கோர முடி​யாது. பாமக நான் உரு​வாக்​கிய கட்​சி; நான் தான் நிறு​வனர், தலை​வர் எல்​லாம். பொது​வாக ஒரு பொதுக்​குழு கூட்ட வேண்​டும் என்​றால் 15 நாட் களுக்கு முன்பே அறிவிக்​கப்​பட்​டு, தலை​மை​யிடம் அனு​மதி பெற்று நடத்த வேண்​டும். அன்புமணி நடத்தும் பொதுக்குழு, நடைபயணம் அனைத்தும் பாமக வின் விதிகளுக்கு எதிரானது. பூம்புகாரில் வரும் 10-ம்தேதி நடை பெற உள்ள மகளிர் மாநாட்டில் 3 லட்சம் மகளிர் பங்கேற்க இருக்கிறார்கள். தமிழகத்தில் பிஹார் மக்கள் வாக்க ளிப்பது முறையாக இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.