அக்டோபர் முதல் 8 லட்சம் அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பெறக்கூடிய ஈட்டிய விடுப்பு சரண் சலுகையை குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்மூலம் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் சலுகை நடைமுறைக்கு வரும் என அறிவிப்பு. இந்த அறிவிப்பு யார் வெளியிட்டுருக்காங்க? ஈட்டிய விடுப்பு சரண் என்றால் என்ன? ஈட்டிய விடுப்பு சரண் மூலம் என்ன பயன்? இதன்மூலம் என்ன வகையான சலுகைகளை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பெற முடியும் என்பது குறித்து விவரங்களை பார்க்கலாம்.

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
2. கொரோனா தொற்றுநோய் காலத்தில் நிதிச்சுமை காரணமாக அரசு அலுவளர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
3. இந்த நடைமுறையை 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்த, 2025-26 ஆம் நிதியாண்டினுடைய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
4. கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை விதி எண் 110ன் கீழ் 'ஈட்டிய விடுப்பு சரண்' செய்யும் நடைமுறை அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
5. இந்த நிலையில் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்டிருந்த ஈட்டிய விடுப்பு சரண் நடைமுறை அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரபூர்வமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்த காலத்திற்கு முன்பாக தற்போது நடைமுறைப்படுத்தப்படுகிறது.
7. இதன் மூலம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் தாங்கள் ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை சரண் செய்து அதற்கான பணப்பலன்களை பெற்றுக்கொள்ளலாம்.
8. இதன்மூலம் கிட்டத்தட்ட 8 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயன்பெறுவார்கள்.
தமிழக அரசினுடைய ஈட்டிய விடுப்பு சரண நடைமுறையை செயல்படுத்துவதன் மூலம் கூடுதலாக 3,561 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
10. ஈட்டிய விடுப்பு சரண் என்பது பணமாக்கல் என்றும் அழைக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் தங்கள் விடுப்பை (EL) எடுப்பதற்குப் பதிலாக அதை பணமாக பெற்றுக்கொள்ளலாம். ஆனால் இது சில நிபந்தனைகள் மற்றும் வரம்புகளுக்கு உட்பட்டது.
மேலும் படிக்க - பெண்களுக்கு இலவச வாகன ஓட்டுநர் பயிற்சி! தமிழ்நாடு அரசின் புதிய முயற்சி!
மேலும் படிக்க - கலைஞர் மகளிர் உரிமைத் தொகை : எல்லோருக்கும் ரூ.1000 கிடைக்குமா? முதலமைச்சர் குட் நியூஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ


Yasmin fathima

