இந்தியா முழுவதும் வருகிறது டோலி சாய்வாலா டீக்கடை.. விண்ணப்பிக்க நீங்க ரெடியா..

டோலி சாய்வாலா என்ற பெயரில் அனைவராலும் அறியப்படும் சுனில் படேல், நாக்பூரில் டீ விற்பனை செய்து வருகிறார். இவர், வழக்கத்திற்கு மாறான, வினோதமான பாணியில் டீ பரிமாறும் விதத்தால் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார். குறிப்பாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் இணைந்து வெளியான ஒரு வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இவரின் புகழ் மேலும் உயர்ந்தது
தற்போது "டோலி சாய்வாலா" என்ற தனது டீ கடை பெயரை ஒரு பெரிய வணிக முயற்சியாக மாற்றி, இந்தியா முழுவதும் விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளார். இதன் மூலம், சாதாரண டீ விற்பனையாளர் என்பதில் இருந்து, தேசிய அளவிலான தொழிலதிபராக மாறும் பாதையில் அவர் அடியெடித்து வைக்க உள்ளார்.
சென்செக்ஸ் 82,634.48 +0.08% நிஃப்டி 25,212.05 +0.06% தங்கம் ₹ 9,100 /gm வெள்ளி ₹ 1,24,000/kg பெட்ரோல் ₹ 100.90 டீசல் ₹ 92.48 கச்சா எண்ணெய் $67.97 USD ₹ 85.99 சென்செக்ஸ் 82,634.48 0.08% நிஃப்டி 25,212.05 0.06% தங்கம் ₹ 9,100 /gm வெள்ளி ₹ 1,24,000/kg பெட்ரோல் ₹ 100.90 டீசல் ₹ 92.48 கச்சா எண்ணெய் $67.97 USD ₹ 85.99 Get Updates Get notified about market trends
செய்திகள் இந்தியா முழுவதும் வருகிறது டோலி சாய்வாலா டீக்கடை.. விண்ணப்பிக்க நீங்க ரெடியா..? டோலி சாய்வாலா என்ற பெயரில் அனைவராலும் அறியப்படும் சுனில் படேல், நாக்பூரில் டீ விற்பனை செய்து வருகிறார். இவர், வழக்கத்திற்கு மாறான, வினோதமான பாணியில் டீ பரிமாறும் விதத்தால் சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார். குறிப்பாக, மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் இணைந்து வெளியான ஒரு வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இவரின் புகழ் மேலும் உயர்ந்தது. தற்போது "டோலி சாய்வாலா" என்ற தனது டீ கடை பெயரை ஒரு பெரிய வணிக முயற்சியாக மாற்றி, இந்தியா முழுவதும் விரிவுபடுத்த முடிவெடுத்துள்ளார். இதன் மூலம், சாதாரண டீ விற்பனையாளர் என்பதில் இருந்து, தேசிய அளவிலான தொழிலதிபராக மாறும் பாதையில் அவர் அடியெடித்து வைக்க உள்ளார். Also Read தங்கம் விலை ரூ.66,000, வெள்ளி விலை ரூ.10,000 சரிவு.. அடேங்கப்பா..!! சமூக வலைதளங்கள் மூலம் தனது புதிய முயற்சியை அறிவித்த டோலி சாய்வாலா, இது சாதாரண வியாபாரம் அல்ல, இந்தியாவில் வைரலாக பரவிய முதல் ஸ்ட்ரீட் பிராண்டாக இருக்கப் போகிறது என்று கூறியுள்ளார். தள்ளுவண்டி டீ கடைகளிலிருந்து, நவீனமான கஃபே வகை கடைகள் வரை நாடு முழுவதும் இந்த வியாபாரத்தை விரிவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக உண்மையான ஆர்வமும், அர்ப்பணிப்பும் உள்ள நபர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்
இந்த 3 விருப்பங்களின் மூலம், முதலீட்டு திறன் மற்றும் இட வசதிகளின் அடிப்படையில் விருப்பப்பட்ட நபர்கள் தங்களுக்கு ஏற்ப தேர்வு செய்ய முடிகிறது. இந்த வாய்ப்பு மூலம், டோலி சாய்வாலா தனது பிராண்டை இந்தியாவின் பல பகுதிகளில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். இந்த அறிவிப்பை வெளியிட்ட இரண்டு நாட்களில் 1,609 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், பலரும் தங்களது கருத்துக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர்.
பயனர் ஒருவர், "இவர் செல்கிற வேகத்தில் இது நீடித்திருக்கும் எனச் சொல்ல முடியாது. மக்கள் எப்போதும் நிலையான தரத்தையே விரும்புகிறார்கள், வேறுபட்ட அனுபவத்தை அல்ல" என்று பதிவிட்டுள்ளார். மற்றொருவர், "ஆக்கிரமிப்பாக இயங்கும் ஒரு டீ ஸ்டால், இவ்வளவு பெரிய திட்டத்தை எப்படி வழங்க முடியும்..?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். மற்றொரு பயனர், "தொழிலதிபர் பில் கேட்ஸின் வருகை, டீ விற்பனை மாடலை ஒரு பெரிய பிசினஸ் மாடலாக மாற்றிவிட்டது" என பதிவிட்டுள்ளார். மேலும், "இவன் பணம் சம்பாதித்து துபாய்க்குப் போய்விடுவான்.. நீங்கள் இங்கு வங்கியில் கடன் வாங்கி சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்" என்று ஒரு பயனர் பதிவிட்டுள்ளார்.
யார் இந்த டோலி சாய்வாலா?: உண்மையான பெயர் சுனில் படேல். இவர் 1998ஆம் ஆண் பிறந்தவர். சிறு வயதிலேயே தனது குடும்பம் நடத்தி வந்த டீ கடையில் உதவி செய்து வந்துள்ளார். கடந்த சில பல ஆண்டுகளாக, இவரின் டீ பரிமாறும் பாணி வித்தியாசமாக இருந்ததால், சமூக வலைதளங்களில் வைரலானார். கடந்த 2024ஆம் ஆண்டு தொழிலதிபர் பில் கேட்ஸ், இவரது டீ ஸ்டாலுக்கு வந்ததும் மேலும் பிரபலம் ஆனார். இவர், தற்போது பிரபலமாக இருந்தாலும் அவர் இன்னும் வழக்கமான சாலையோர டீ ஸ்டாலிலேயே தினமும் டீ விற்பனை செய்கிறார். தினம் 350 முதல் 500 டீ கப்புகள் வரை விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. சுனில் படேலின் நிகர மதிப்பு ரூ.10 லட்சத்திற்கு மேல் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன