நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி நடிகை தன்யாவுக்கு கல்யாணம்! காதலர் இந்த பிரபலம் தான்

சென்னை: காதலிக்க நேரமில்லை படத்தின் மூலம் பிரபலமான பழம்பெரும் நடிகரான ரவிச்சந்திரனின் பேத்தி நடிகை தன்யா ரவிச்சந்திரன் தமிழில் கருப்பன் என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானார். அவர் இப்போது தன்னுடைய காதலை அறிமுகப்படுத்தி இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகளுக்கு என்னதான் திறமை, அழகு, உழைப்பு என்று இருந்தாலும் வாய்ப்புகளும் அவர்களுக்கான அங்கீகாரமும் பெரிதாக கிடைக்கவில்லை. அது போல ஒருவர் தான் தன்யா ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் தன்யாவின் நிஜ பெயர் அபிராமி ஸ்ரீராம் தான். இயக்குனர் மிஷ்கின் தான் இவருக்கு தன்யா ரவிச்சந்திரன் என்று பெயரை மாற்றி வைத்திருந்தார்.
நடிகை தன்யா படிப்பு
தன்யா சென்னையில் உள்ள எம்ஒபி வைஷ்ணவ கலை மகளிர் கல்லூரியில் வணிகவியல் பட்டம் பெற்றிருக்கிறார். அதோடு மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்கில் முதுகலை பட்டமும் பெற்றிருக்கிறார். தன்யாவின் அம்மா லாவண்யா ஸ்ரீராம் பரதநாட்டிய கலைஞர். அதனால் தன்யாவும் அவருடைய சகோதரியும் சிறுவயதிலேயே பரதநாட்டியம் கற்று சென்னையில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார்கள்
.
சின்ன வயதிலேயே மேடையில் பரதநாட்டியம் ஆடி பழகிக் கொண்டதால் இவருக்கு மேடை பயம் அறவே கிடையாதாம். அப்போது இருந்தே நடிப்பின் மீதும் ஆர்வம் வந்திருக்கிறது. தாத்தாவை பார்த்து வளர்ந்த பேத்திக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான "பலே வெள்ளையத்தேவா" என்ற திரைப்படம் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் உடன் இணைந்து நடித்திருந்தார். அந்த திரைப்படம் பெரிய அளவில் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்தது
ஆனாலும் அதை தொடர்ந்து அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2017 ஆம் ஆண்டு வெளியான பிருந்தாவனம் திரைப்படத்தில் அருள் நிதி மற்றும் விவேக் உடன் இணைந்து நடித்திருந்தார். அதை தொடர்ந்து விஜய் சேதுபதி மற்றும் பாபி சிம்ஹாவுடன் கருப்பன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் தான் இவருக்கு அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல அடையாளத்தை கொடுத்தது.
இந்த திரைப்படத்திற்கு பிறகு நெஞ்சுக்கு நீதி, மாயோன், அகிலன் மற்றும் ரசவாதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் ரசவாதி திரைப்படத்தில் இவர் நடித்தது பாராட்டப்பட்டாலும் சில விமர்சனங்களையும் சந்தித்து வந்தது. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமாவிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். தன்யா திரைப்படங்களில் நுழைவதற்கு முன்பே சில விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார்.
விளம்பரங்களில் நடிப்பு
அதிலும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடிகை சினேகாவுடன் நடித்து பெயர் வாங்கி இருந்தார். சினிமா நடிப்பு என்று ஒரு பக்கம் இருந்தாலும் சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கிறார். சோசியல் மீடியாவில் ஆரம்பத்தில் ஹோம்லி ஆன போட்டோக்களை பகிர்ந்து வந்த தன்யா இப்போது கவர்ச்சியான சில புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று தன்யாவின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான நான். அதாவது நேற்று ஜூலை 15ஆம் தேதி அவருக்கு எங்கேஜ்மென்ட் நடைபெற்றிருக்கிறது. அவருடைய காதலருடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பென்ஸ் திரைப்பட ஒளிப்பதிவாளர் கௌதம் ஜார்ஜுடன் நேற்று நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். அப்போது அவருக்கு உதட்டுடன் முத்தம் கொடுத்த போது எடுத்த சில புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இந்த புகைப்படங்களை பார்த்ததும் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். அதுபோல தனியாவிற்கு நேற்று இன்னொரு மகிழ்ச்சியான சம்பவமும் நடந்திருக்கிறது. அதாவது ஆர் எஸ் பிரபாகரன் இயக்கத்தில் தன்யா நடித்துள்ள "ரெக்கை முளைத்தேன்" திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்த முக்கியமான விஷயத்தை தன்யா பகிர்ந்து இருக்கிறார்.
.