திருப்பூரில் புறம்போக்கு நிலத்தில் புதையல்.. விலை மதிப்பு மிக்க பச்சை கற்கள்.. சுற்றுப்போடும் மக்கள்

திருப்பூரில் புறம்போக்கு நிலத்தில் புதையல்.. விலை மதிப்பு மிக்க பச்சை கற்கள்.. சுற்றுப்போடும் மக்கள்
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே பூசாரி வலசு மன்கரடு பகுதியில் அரசுக்கு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே பூசாரி வலசு மன்கரடு பகுதியில் அரசுக்கு சொந்தமான 4.36 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது.இங்கு விலை மதிப்பு மிக்க அரிய வகை தாதுக்கள் இருப்பதாக கூறி சில வருடங்களுக்கு முன்பு மத்திய புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். இந்நிலையில் அங்கு புதையல் இருப்பதாக தகவல்கள் பரவியது. அங்கு தோண்டியவர்களுக்கு மதிப்புமிக்க சிறு சிறு பச்சை கற்கள் கிடைத்தது.. அங்கு புதையலை தேடி ஒரு கும்பல் ஜேசிபியை வைத்தே தோண்டியிருக்கிறது.. என்ன நடந்தது என்பதை பார்ப்போம்..

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ளது பச்சாபாளையம் கிராமம். இந்த வருவாய் கிராமத்திற்கு உள்பட்ட பூசாரி வலசு மன்கரடு பகுதியில் அரசுக்கு சொந்தமான 4.36 ஏக்கர் புறம்போக்கு நிலம் இருக்கிறது. இந்தபகுதியில் விலை மதிப்பு மிக்க அரிய வகை தாதுக்கள் இருப்பதாக சில வருடங்களுக்கு முன்பு மத்திய புவியியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் அந்த பகுதியில் உள்ள அனைத்து கிராம மக்களுக்கும் தெரியும். இதனால் அந்த இடத்தில் புதையல் இருக்கலாம் என மக்கள் நம்பத் தொடங்கினார்கள்...

கோவில் இருக்கிறது

மக்கள் புதையல் இருப்பதாக நம்பும் பகுதி என்பது, உயரமான மண் கரடு பகுதியாகும். இங்கு ஒரு கோவில் உள்ளது. அந்தப் பகுதி ஆங்கிலேயர் ஆட்சியில் படைத்தளம், ஆயுதங்கள் சேமிப்பு கிடங்கு, மற்ற பகுதிகளை கண்காணிக்கும் இடமாகவும் இருந்ததாக சொல்லப்படுகிறது. இங்கு புவியியல் துறையின் முக்கியத்துவம் வாய்ந்த ஜி.டி. ஸ்டேஷன் எனப்படும் இந்திய முக்கோணவியல் அளவீட்டுக் கல் இன்றும் இருக்கிறது.

புதையலை தேடிய 4 பேர் கைது

இது குறித்து வெள்ளகோவில் போலீசில் விஏஓ புகார் அளித்தார். இதையடுத்து வெள்ளக்கோவில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிமுத்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து கரூர் மாவட்டம் புகலூர் தாலுகா புன்னம் சத்திரம் பெருமாள் நகரை சேர்ந்த குமரேசன் (வயது 31), வீரக்குமார் (37), பரமத்தி அண்ணா நகரை சேர்ந்த மூர்த்தி (51) திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா சிங்கார சோலையைச் சேர்ந்த குமரவேல் (35) ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பூர் வெள்ளகோவில் பகுதியில் புதையல் உள்ளதாக மக்கள் நம்பும் பகுதியில் பலர் சுற்றுப்போட தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...