சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு புல் ஸ்டாப்! துறைமுகம்-மதுரவாயல் திட்டத்தில் வரும் முக்கிய மாற்றம்

சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு புல் ஸ்டாப்! துறைமுகம்-மதுரவாயல் திட்டத்தில் வரும் முக்கிய மாற்றம்
சென்னை துறைமுகத்தைச் சுற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க

சென்னை: சென்னை துறைமுகத்தைச் சுற்றி போக்குவரத்து நெரிசலை குறைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் வரவிருக்கும் சென்னை துறைமுகம்-மதுரவாயல் வழித்தடத்தின் நுழைவுப் பகுதியில் லாரி நிறுத்துமிடத்தை அமைக்க துறைமுக அதிகாரிகள், தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து ஆணையம் மற்றும் மாநில அரசுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்...

சென்னை துறைமுகத்திற்கு வந்திறங்கும் சரக்குகள், பெங்களூர் போன்ற நகரங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதற்காக சென்னையின் நகருக்குள் கனரக வாகனங்களின் புழக்கம் அதிகமாகவும் இருக்கிறது. எனவே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துக்களும் அதிகம் நடக்கின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க உருவாக்கப்பட்ட திட்டம்தான் 'துறைமுகம்-மதுரவாயல் ஈரடுக்கு வழித்தடம்'..

இந்த வழித்தடத்தில் 20.56 கி.மீ தொலைவுக்கு இரட்டை மேம்பாலம் அமைக்கப்படும். இதற்கான பணிகள் தற்போது தீவிரமடைந்து வருகின்றன. இந்த திட்டம் தொடங்கும் இடம் மதுரவாயல். இங்கு லாரிகள் நிறுத்துமிடம் இடம் அமைக்க துறைமுக அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். இதன் மூலம் தேவையற்ற வாகன நெரிசல் குறையும்..

தற்போது சுங்க மற்றும் டெர்மினல் அனுமதிகளுக்காக, துறைமுகம் பகுதியில் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மதுரவாயலில் லாரி நிறுத்தம் வந்தால், துறைமுகத்திற்கு பதில் அனுமதி வாங்க வேண்டிய லாரிகள் இங்கேயே நிறுத்தப்படும். கடந்தாண்டு மே மாதம் இதற்கான கூட்டம் நடைபெற்றது. லாரி நிறுத்தத்திற்காக 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்க கோரி முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து 'அடையாலம்பட்டு' வருவாய் கிராமத்தில் இதற்கான இடம் கண்டறியப்பட்டது...

இந்த ஆண்டு மே மாதம் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை ஆணைய அதிகாரிகள் ஆய்வு நடத்தி, 8.5 ஏக்கர் மற்றும் 3.5 ஏக்கர் என இரண்டு நிலங்களை லாரி நிறுத்தத்திற்கான பார்க்கிங் உருவாக்க ஏற்ற இடமாக உறுதி செய்தனர். தற்போது இந்த இடத்தை சுத்தம் செய்ய மாநில அரசின் உதவி கோரப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி லாரியை நிறுத்தம் உருவாக்கப்படும் பட்சத்தில், சென்னைக்குள் வரும் லாரிகளின் எண்ணிக்கை வரையறை செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இதன் மூலம் போக்குவரத்து என்று சொல் மற்றும் தேவையற்ற விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.