ரயில் லோகோ பைலட்களுக்கு இரவில் இருக்கும் சவாலான பணி.. சிக்னல்களை எப்படி ரீட் செய்வார்கள் தெரியுமா

ரயில் லோகோ பைலட்களுக்கு இரவில் இருக்கும் சவாலான பணி.. சிக்னல்களை எப்படி ரீட் செய்வார்கள் தெரியுமா
ரயில் லோகோ பைலட்களுக்கு இரவில் இருக்கும் சவாலான பணி..

சென்னை: எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் போன்ற ரயில்களில் பயணத்தின் போது, பயணிகள் அனைவரும் தூங்கினாலும் ரயிலின் லோகோ பைலட்கள் விடிய விடிய கண்விழித்து ரயிலை இயக்குவார்கள். இரவு நேரத்தில் ரயிலின் லோகோ பைலட்களுக்கு என்ன மாதிரியான பணி இருக்கும்? எப்படி சிக்னல்களை ரீட் செய்வார்கள்?, ரயிலை பாதுகாப்பாக இயக்க லோகோ பைலட்களுக்கு என்ன மாதிரியான அறிவுறுத்தல்கள் உள்ளன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

இந்தியாவில் மிகப்பெரிய நெட்வொர்க்கை கொண்ட போக்குவரத்து அமைப்பாக ரயில்வே உள்ளது. நாடு முழுவதும் பல ஆயிரம் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ரயில்களை பொறுத்தவரை எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் போன்ற ரயில்கள் இரவு முழுவதும் விடிய விடிய இயக்கப்படுகின்றன.

இந்த ரயில் பயணத்தின் போது, பயணிகள் அனைவரும் தூங்கினாலும் ரயிலின் லோகோ பைலட்கள் விடிய விடிய கண்விழித்து ரயிலை இயக்குவார்கள். இரவு நேரத்தில் ரயிலின் லோகோ பைலட்களுக்கு என்ன மாதிரியான பணி இருக்கும்.. ரயிலை பாதுகாப்பாக இயக்க லோகோ பைலட்களுக்கு என்ன மாதிரியான அறிவுறுத்தல்கள் உள்ளன என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

எக்ஸ்பிரஸ், சூப்பர் பாஸ்ட் உளிட்ட தொலை தூர ரயில்களில் இரண்டு லோகோ பைலட்கள் இருப்பார்கள். ஒரு லோகோ பைலட் மற்றும் உதவி லோகோ பைலட் என இருவர் ரயிலை இயக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பார். இரு லோகோ பைலட்களுக்கும் இடையேயும் உரையாடல் இருந்து கொண்டே இருக்கும். அதற்காக தூக்கம் வரக்கூடாது, பொழுதுபோக்கிற்காக பேசுவார்கள் என நினைக்க வேண்டாம்..

லோகோ பைலட்களுக்கு இடையேயான உரையாடல்கள்

ரயிலின் இரு லோகோ பைலட்களுக்கு இடையேயான உரையாடல் என்பது சிக்னல் பற்றியதாக இருக்கும். ரயில்களை பத்திரமாக இயக்கி பயணிகளை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதில் சிக்னல் என்பது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஒவ்வொரு சிக்னல் வரும் போதும் சத்தமாக அதை சொல்லி.. மற்றொரு லோகோ பைலட் உறுதி செய்ய வேண்டும்.

அதாவது, சிக்னல் எண் 1050 பச்சை விளக்கு எரிகிறது என்றால், லோகோ பைலட் உடனடியாக சிக்னல் 1050 கிரீன்" என்று சொல்வார். இதை அருகில் இருக்கு உதவி லோகோ பைலட்டும் உடனடியாக ஏற்றுக்கொண்டு பதிலளிக்க வேண்டும். சிக்னலை இருவரும் சத்தமாக உறுதி செய்வது பெரிய விஷயம் இல்லை என தோன்றினாலும் ரயில்களில் மனித தவறுகள் சிறிதளவு கூட நடக்க கூடாது என்பதை உறுதி செய்வதற்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

ரயில்வே வாரியத்தில் கட்டமைப்பு உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்ற பிரதீப் குமார் என்பவர் இது குறித்து கூறியதாவது:- "ரயில்வே தண்டவாளங்களில் சிக்னல்கள் அமைந்து இருக்கும் தொலைவு என்பது ரயில்கள் அடிக்கடி செல்லும் இடத்தை பொறுத்து மாறுபடும். பரபரப்பு இல்லாத பகுதிகளில் 1 முதல் 2 கிலோ மீட்டர் தொலைவிற்குள் சிக்னல் இருக்கும். அதிக டிராபிக் இருக்கும் இடங்களில் 200 முதல் 800 மீட்டர் தொலைவிற்குள் கூட இருக்கும்

எந்த பகுதியில் அதிக இடம் தேவையோ அதை பொறுத்து சிக்னல்கள் இருக்கும். சிக்னல்கள் கோளாறுகள், சிக்னல் ஜம்பிங் ஆகியவை விபத்திற்கு வழிவகுக்கும் என்பதால் இரவு நேரத்தில் மிகவும் விழிப்பாக ரயில்வே லோகோ பைலட்கள் செயல்படுவார்கள்.

மிகவும் இக்கட்டான முடிவுகளை கூட ரியல் டைமில் எடுப்பதற்கான தயார் நிலையில், எப்போதும் இருக்க வேண்டியிருக்கும். லோகோ பைலட் பணிகளை பொறுத்தவரை டெக்னிக்கல் ஸ்கில் ஒருபக்கம் என்றாலும் ஒழுக்கம், உன்னிப்பாக கவனித்து செயல்படுதல் உள்ளிட்டவையே பெரிய பொறுப்பாக இருக்கும் என்று ரயில்வே பற்றி நன்கு அறிந்தவர்கள் கூறுகிறார்

.