.100 கோடி பங்களாவை விட்டுட்டு.. சென்னை ஈசிஆரில் ஜோதிகா தனி வீடு.. சங்கடத்தில் சிவகுமார்?: பிரபலம்

சென்னை: நடிகர் சிவகுமார், 2 மகன்களின் குடும்பத்தினருடன் ஒன்றாக சேர்ந்து வசிப்பதற்காக சென்னை தி.நகரில் ரூ.100 கோடி ரூபாய் மதிப்பில் பெரிய பங்களா கட்டியிருக்கும்போது, ஆனால், நடிகை ஜோதிகா சென்னை வரும்போது, தி.நகர் வீட்டில் தங்குவதில்லை என்றும், இதற்காகவே சென்னை ஈசிஆரில் புதிய பங்களா கட்டியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.. இது எந்த அளவுக்கு உண்மை என்று வலைப்பேச்சு அந்தணனிடம் சேனல் ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அந்தணன் தன்னுடைய கருத்துக்களை பதிலாக கூறியிருக்கிறார்.
சமீபத்தில் நடிகை ஜோதிகா, தன்னுடன் நடித்த சக நடிகைகளை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து, விருந்து தந்திருந்தார்.. இது எதற்கான விருந்து என்று தெரியவில்லை..
சக நடிகைகளுக்கு மரியாதை தரலாம் அல்லது விசேஷம் ஏதாவது ஜோதிகா வீட்டில் நடந்திருக்கலாம் என்றே கணிக்கப்பட்டது
-ஒருமுறை தயாரிப்பாளர் கே.ராஜன் மேடையில் பேசும்போது, "படம் தோல்வியடைந்து விட்டால், பாதி பணத்தை திருப்பி தரக்கூடிய ஒரே நடிகை ஜோதிகாதான். என்றார்.
பெரும்பாலும் நடிகைகளுக்கு 90 காலகட்டத்தில் பெரிய சம்பளம் கிடையாது. அப்படியிருந்தும்கூட, தோல்வியடைந்த படத்தயாரிப்பாளரை அழைத்து, பணத்தை பாதியாக தந்து, அவர்களது சுமையை குறைக்கக்கூடியவர் ஜோதிகா.. இந்த குணம் திரையுலகில் வேறு எந்த நடிகைக்கும் கிடையாது" என்று பெருமிதமாக கூறியிருந்ததை இங்கு நினைவுகூர வேண்டியிருக்கிறது.
இந்நிலையில், Media Circle என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன், "சென்னை தி.நகரில் பல்வேறு வசதிகளுடன்தான் சிவக்குமார் வீடு கட்டினார்.. லேசரிலேயே அமைந்துள்ளதாம்.. அதாவது கதவு திறப்பது முதல் எல்லாமே புதிய தொழில்நுட்பத்துடன் கட்டியதாக சொல்கிறார்கள்.. சிவக்குமார் தம்பதி, சூர்யா தம்பதி, கார்த்தி தம்பதியினர் என அனைவரும் குழந்தைகளுடன் அதே வீட்டில்தான் இருந்துள்ளனர்
ஜோதிகாவின் மும்பை வாசம்
ஆனால், இதற்கு நடுவில் ஜோதிகாவின் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. எனவே, ஜோதிகா மும்பைக்கு சென்றார்.. தன் அம்மாவின் கடைசிகாலத்தில், தான் கூடவே இருந்து கவனித்து கொள்ள வேண்டும் என்றும் ஜோதிகா கூறியிருக்கிறார்.
எனவே, பிள்ளைகளையும் மும்பையிலுள்ள பள்ளியிலேயே சேர்த்து விட்டார்.. இதனால் சூர்யாவும் அங்கே செல்ல நேரிட்டது.. ஷூட்டிங் , வீட்டு விசேஷம் உட்பட சென்னைக்கு வருவதானாலும்கூட, மும்பையிலிருந்து வர முக்கால் மணி நேரம்தான் ஆகும்.. எனவே, அது பெரிய சிரமம் கிடையாது.
ஆனாலும் சென்னைக்கு வரும் ஜோதிகா, சிவக்குமார் வீட்டில் தங்குவதில்லை? என்ற அடுத்த கேள்வி வலம் வந்தபடி உள்ளது
சிவக்குமார் ஒழுக்கமானவர்
சிவக்குமார் சாரை பொறுத்தவரை, அனைத்து ஒழுக்க நெறிகளையும் தன்னுடைய வாழ்வில் கடைப்பிடிப்பவர்.. ஒரு குடும்பம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று நினைப்பவர்..
அது சம்பந்தமாக கூட ஏதாவது அட்வைஸ் செய்து, அது ஜோதிகாவுக்கு பிடிக்காமலும் இருக்கலாம். இது பெரும்பாலும் எல்லார் வீட்டிலும் நடப்பதுதான்.. எனவே, சென்னை வந்தால் தங்குவதற்காகவே, ஈசிஆரில் ஒரு தனி பங்களா கட்டி முடித்துள்ளார்.. அந்த வீட்டில் நிகழ்ச்சி நடத்தி, சிவக்குமார் சார் உட்பட அனைவருமே கலந்து கொண்டனர்.. அந்த போட்டோவும் இணையத்தில் வைரலானது..
ஈசிஆரில் சொந்த வீடு
ஈசிஆரில் வீடு கட்டுவதென்பது, ஒரு அந்தஸ்தாகவே கருதப்படுகிறது.. விஜய், அஜித் உட்பட தமிழ் சினிமாவின் அனைத்து பிரபலங்களுமே ஈசிஆரையும் தாண்டி, மாமல்லபுரம் வரை போய்விட்டார்கள்..
திருமணத்துக்கு பிறகு ஜோதிகா நடிக்கக்கூடாது என்றுதான் சிவக்குமார் சொல்லியிருந்தார். ஜோதிகாவும் நடிக்காமல் இருந்தார்.. ஒரு மேடையில் சிவக்குமார் பேசும்போது, என்னுடைய மகள் ஜோதிகா என்றே புகழ்ந்தார்..
ஆனால், 36 வயதினிலே படத்தில் மீண்டும் நடிக்க துவங்கி, பல நல்ல படங்களை தேரந்தெடுத்து நடித்தார் ஜோதிகா. பிள்ளைகளும் தற்போது வளர்ந்துவிட்டதால், நிறைய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.. அதுமட்டுமல்லாமல், மும்பையிலேயே, மற்றொரு படக்கம்பெனி துவங்கி, இந்தி படங்களை எடுக்கும் எண்ணமும் ஜோதிகாவுக்கு இருப்பதாக தெரிகிறது. எனவேதான் மும்பையில் தங்கியிருப்பதை விரும்புகிறார்" என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.