ரஜினியை அப்படித்தான் கூப்பிடுவேன்' - 50 வருட நட்பு குறித்து மனம் திறந்த மோகன்பாபு

ரஜினியை அப்படித்தான் கூப்பிடுவேன்' - 50 வருட நட்பு குறித்து மனம் திறந்த மோகன்பாபு
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் ரஜினிகாந்த், 74 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு கடும் சவால்

மெட்ராஸ் பிளாட்பாரத்தில் இருந்தபோதே ரஜினிகாந்தை எனக்கு தெரியும்.

ஒன்றும் இல்லாதபோது தான் நாங்கள் சந்தித்தோம்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வரும் ரஜினிகாந்த், 74 வயதிலும் இளம் ஹீரோக்களுக்கு கடும் சவால் அளிக்கும் வகையில் சுறுசுறுப்பாக படங்கள் நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் 'கூலி' படம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) திரைக்கு வருகிறது.

இதற்கிடையில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்பாபு, ரஜினிகாந்த் உடனான நட்பு குறித்து பேசியுள்ளது கவனம் ஈர்த்திருக்கிறது.

''மெட்ராஸ் பிளாட்பாரத்தில் இருந்தபோதே ரஜினிகாந்தை எனக்கு தெரியும். ஒன்றும் இல்லாதபோது தான் நாங்கள் சந்தித்தோம். 50 வருட நட்பு எங்களுடையது.

இப்போதும்கூட, நான் ரஜினிகாந்தை எங்கு சந்தித்தாலும் அவரை நான் 'பிளடி தலைவா' என்று தான் கூப்பிடுவேன். யாருக்காகவும் போலியாக அவரிடம் நடிக்கமாட்டேன். அது அவருக்கும் நன்றாக தெரியும்'' என்று மோகன்பாபு தெரிவித்தார்.