ஈசிஆர் பங்களா அலங்கோலம்.. போதையில் புரண்ட ‘நம்பர்’ நடிகை! சிக்க போகும் ’உச்ச’ நடிகர்? பரபர கோலிவுட்!

சென்னை: பாலிவுட் தெலுங்கு திரையுலகத்தை தொடர்ந்து போதைப் பொருள் புயலில் சிக்கி தவித்து வருகிறது தமிழ் திரை உலகம். நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் போதை பொருள் வழக்கில் கைதாகி ஜாமினில் வெளி வந்திருக்கின்றனர். இந்த நிலையில் விற்பனை கும்பலுடன் தொடர்பில் இருந்த நடிகர், நடிகைகள் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மூன்றெழுத்து 'நம்பர்' நடிகையும் போதை பொருள் விவகாரத்தில் சிக்க இருப்பதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாலிவுட், தெலுங்கு திரையுலகங்களில் போதைப்பொருள் விவகாரம் சகஜம் தான். அவ்வப்போது பார்ட்டிகளின் போது ரெய்டு நடத்தப்படுவதும் பிரபலமான நடிகர் நடிகைகள் கைது செய்யப்படுவதும் வாடிக்கை.
ஏற்கனவே பல பிரபல நடிகர்கள் போதை பொருள் வழக்கில் சிக்கி சிறை சென்றும் வந்திருக்கின்றனர். ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை போதை பொருள் விவகாரம் என்பது அரிதிலும் அரிதானது. கடந்த 2011ஆம் ஆண்டு போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகை ஒருவரை இணைத்து பேசப்பட்டது.
2024 ஆம் ஆண்டிலும் பிரபல நடிகர்கள், நடிகைகள் மீது போதைப் பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக உள்துறை செயலரிடம் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் மீண்டும் தமிழ் திரை உலகில் பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது போதைப்பொருள் விற்பனை விவகாரம். பிரபல பார் ஒன்றில் தகராறு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் நடிகர் நடிகைகளுக்கு போதை பொருள் சப்ளை செய்தது தெரிய வந்தது
அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக பிரபல நடிகர்களான ஸ்ரீகாந்த் கிருஷ்ணா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பிரசாத்திடமிருந்து போதைப் பொருட்களை வாங்கி பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் அவர்களிடம் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அவர்களுக்கு உயர் நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. இதை அடுத்து அவர்கள் புழல் சிறையில் இருந்து வெளிவந்தனர்
கிட்டத்தட்ட 15 நாட்களுக்கு மேலாக அவர்கள் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பிரசாத், கெவின் உள்ளிட்டோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல் வெளியானதாக சொல்லப்படுகிறது. திரையுலகினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பிரசாத் சென்னை ஈசிஆர் கெஸ்ட் ஹவுஸ்கள், பீச் ஹவுஸ்களில் நடக்கும் பார்ட்டிகளுக்கு போதைப் பொருள் சப்ளை செய்தது தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் பல நடிகர் நடிகைகள் அவரிடம் போதைப் பொருட்கள் வாங்கியதாக சொல்லப்படுகிறது
பிரசாத்திடம் விசாரணை நடத்தப்பட்டதை அறிந்த பல பிரபலங்கள் தங்கள் செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவானதாகவும் சொல்லப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தமிழ் திரை உலக உச்ச நடிகர் ஒருவரும், நம்பர் நடிகை ஒருவரும் பிரசாத்தின் வாடிக்கையாளர்கள் என சொல்லப்படுகிறது. ஆனால் பிரசாத்திடம் நேரடியாக போதைப் பொருள் வாங்காமல் பிறர் மூலம் வாங்கி பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே இது நடிகை நடிகர் மீது கடந்தாண்டும் 2011 ஆம் ஆண்டும் போதைப் பொருள் குற்றச்சாட்டு இருந்தது. ஆனால் அப்போது போலீசார் வழக்கு பதிவு செய்யவில்லை. தற்போது இதேபோல புகார் எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது. யார் அந்த நம்பர் நடிகை? யார் அந்த உச்ச நடிகர்? என மறைமுக விசாரணையை போலீசார் நடத்தி வருவதாகவும் தகவல்கள் சொல்கின்றன.