தூத்துக்குடிக்கு ஜாக்பாட்! வருது 10 பில்லியன் டாலர் முதலீடு .. இளைஞர்களே ரெஸ்யூம ரெடி பண்ணுங்க!!

தூத்துக்குடிக்கு ஜாக்பாட்! வருது 10 பில்லியன் டாலர் முதலீடு .. இளைஞர்களே ரெஸ்யூம ரெடி பண்ணுங்க!!
முதலீடு .. இளைஞர்களே ரெஸ்யூம ரெடி பண்ண

தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தன்னுடைய மின்சார கார் உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது. இதன் மூலம் அந்த மாவட்ட மக்களுக்கு பெருமளவிலான வேலை வாய்ப்பு உருவாகி இருக்கிறது. இந்த சூழலில் லத்தீன் அமெரிக்க நாடுகள் பெரிய அளவில் தூத்துக்குடி மாவட்டத்தில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இடையிலான வர்த்தகம் என்பது 2000ஆம் ஆண்டு 2 பில்லியன் டாலராக தான் இருந்தது அது தற்போது 18 பில்லியன் டாலர்களாக உயர்ந்து இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை லித்தியம் மற்றும் அரிய வகை பொருட்களை இறக்குமதி செய்வதில் தீவிர கவனம் செலுத்துகிறது .தென்னிந்தியாவில் இருக்கக்கூடிய துறைமுகம் சார்ந்த நகரங்களில் எல்லாம் இது சார்ந்த முதலீடுகளை ஈர்ப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது. எனவே லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் பாதுகாப்பு ,உள்கட்டமைப்பு ,லாஜிஸ்டிக்ஸ், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய பிரிவுகளின் தென்னிந்தியாவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டுவதாக ராஜ்குமார் ஷர்மா தெரிவிக்கிறார்.

ஏற்கனவே தென்னிந்திய மாநிலங்கள் லத்தின் அமெரிக்க நாடுகளிடமிருந்து 40 மில்லியன் டாலர்கள் அளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளன எனக் கூறியிருக்கும் அவர், இதில் பெருமளவிலான முதலீடு தமிழ்நாட்டை நோக்கி தான் வந்திருக்கிறது என தெரிவித்திருக்கிறார். முன்னதாக இந்தியா லத்தீன் அமெரிக்க நாடுகளின் கூட்டமைப்பு சார்பாக நடத்தப்பட்ட மாநாட்டில் கியூபா, சிலி, வெனிசுலா ,அர்ஜென்டினா , எல் சால்வடார் நாடுகளை சேர்ந்த தொழில்துறை தலைவர்களும் ,தூதரக அதிகாரிகளும், தொழில் நிபுணர்களும் கலந்து கொண்டனர்.