சீனா, அமெரிக்காவிற்கு புதிய சிக்கல்., இந்தியாவின் நட்பு நாடுடன் பிரான்ஸ் Rafale ஒப்பந்தம்

இந்தியாவின் நட்பு நாடொன்றிற்கு ரஃபேல் போர் விமானங்களை விற்க பிரான்ஸ் ஆர்வம் காட்டி வருகிறது. இது சீனா மட்டும் அமெரிக்காவிற்கு சிக்கலாக உருவெடுக்கலாம்.
இந்தியாவுடன் ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தை முடித்த பிரான்ஸ், தற்போது இந்தோனேசியாவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்திட முயற்சிக்கிறது.
பிரான்ஸ் அதற்காக இந்தோனேசியா ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோவுக்கு சிறப்பான வரவேற்பையும், தேசிய விழாவில் (Bastille Day) விருந்தினராக அழைத்து, உறவை வலுப்படுத்த முயற்சி செய்துள்ளது.
பிரான்ஸ்-இந்தியா ரஃபேல் ஒப்பந்த பின்னணி:
2023-ல் இந்தியா, ரூ.64,000 கோடி மதிப்பில் 26 Rafale-M விமானங்களை கடற்படைக்காக வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2028 முதல் 2030 வரை இந்த விமானங்கள் இந்தியாவிற்கு வழங்கப்படவுள்ளது.
இந்தோனேசியா ஏன் ரஃபேல் வாங்க விரும்புகிறது?
தென்கிழக்காசியாவின் மிகப்பாரிய பொருளாதார நாடான இந்தோனேசியா, தென் சீனக் கடலில் சீனாவின் அழுத்தம் அதிகரிக்கும் சூழ்நிலையில் தனது பாதுகாப்பை வலுப்படுத்த விரும்புகிறது.
அமெரிக்காவிடம் நெருக்கமாக செல்ல விரும்பாத இந்தோனேசியா, பிரான்ஸ் போன்ற நாடுகளுடன் ஒத்துழைப்பில் பாதுகாப்பு பலப்படுத்த விரும்புகிறது.
இந்தோனேசியா - பிரான்ஸ் பாதுகாப்பு ஒப்பந்தம்:
2024 மே மாதம், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் இந்தோனேசியாவிற்குச் சென்று, 42 ரஃபேல் விமானங்களும், 2 ஸ்கார்பின் நீர்மூழ்கி கப்பல்களையும் வாங்குவதற்கான தொடக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அபாயங்களும் உள்ளன...
சீனாவுடன் கடந்த ஆண்டு Nine-Dash Line ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தோனேசியா, தற்போது இரு வலுவான நாடுகளுக்கிடையே சமநிலை காக்க முயல்கிறது...