பறந்து போ விமர்சனம்: இயக்குநர் ராம், மிர்ச்சி சிவா காம்போ ரசிகர்களை கவர்ந்ததா?

பறந்து போ விமர்சனம்: இயக்குநர் ராம், மிர்ச்சி சிவா காம்போ ரசிகர்களை கவர்ந்ததா?

இயக்குநர் ராமின் 'பறந்து போ' திரைப்படம் இன்று (ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிவா, அஞ்சலி, மிதுல் ரயான், கிரேஸ் ஆண்டனி, அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்துள்ளார், பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.

'கற்றது தமிழ்' திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற அழுத்தமான கதைகள்- கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களுக்காக அறியப்படுபவர் இயக்குநர் ராம். ஆனால், சரோஜா, வணக்கம் சென்னை, கலகலப்பு, தமிழ் படம், போன்ற திரைப்படங்களில் தனது நகைச்சுவை கலந்த நடிப்பிற்காக அறியப்படுபவர் 'மிர்ச்சி' சிவா.

அப்படியிருக்க இவர்கள் இருவரும் இணையும் திரைப்படம் எப்படி இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.

அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா 'பறந்து போ'? இது வழக்கமான ராம் திரைப்படமா அல்லது சிவாவின் பாணியிலான நகைச்சுவைத் திரைப்படமா?