புதுச்சேரியில் மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத திருக்கை மீன்

புதுச்சேரி ஏனாம் பகுதியில் சுமார் 100 கிலோ எடையுடைய திருக்கை மீன் மீனவர்கள் வலையில் சிக்கியது. புதுச்சேரியின் ஏனாம் பகுதி ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் அருகில் அமைந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை மீனவர்கள் கோதாவரி ஆற்றின் முகத்துவாரப்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது இந்த திருக்கை மீன் சிக்கியது.
கடலில் இருக்கும் மீன் தவறுதலாக முகத்துவாரம் வழியாக ஆற்றுக்குள் வந்திருக்கலாம் என மீனவர்கள் தெரிவித்தனர். இந்த மீன் ரூ. 17 ஆயிரத்துக்கு ஏலம் போனதாகவும் அவர்கள் கூறி
னர்.