வெறும் 30 நிமிடத்தில் 900 கோடி இழப்பு.. ஜுன்ஜுன்வாலா குடும்பத்திற்கு பெரிய நஷ்டம்.. என்ன தான் ஆச்சு

வெறும் 30 நிமிடத்தில் 900 கோடி இழப்பு.. ஜுன்ஜுன்வாலா குடும்பத்திற்கு பெரிய நஷ்டம்.. என்ன தான் ஆச்சு
வெறும் 30 நிமிடத்தில் 900 கோடி இழப்பு..

மும்பை: இந்தியாவில் பிரபல முதலீட்டாளராக இருப்பவர்கள் ஜுன்ஜுன்வாலா குடும்பத்தினர். இவர்கள் பல நிறுவனங்களில் சரியான நேரத்தில் முதலீடு செய்து அதிக லாபம் பார்த்தவர்கள். அப்படித் தான் அவர்கள் டைட்டன் நிறுவனத்திலும் முதலீடு செய்து நல்ல லாபம் பார்த்திருந்தார்கள். ஆனால், திங்கள்கிழமை டைட்டன் மதிப்பு சரிந்த நிலையில், இதனால் அவர்களுக்கு ரூ.900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

பங்குச்சந்தை என்பது அதிக ரிஸ்க் மற்றும் அதிக லாபம் தரும் துறையாகும். இங்கு ஈஸியாக லாபத்தையும் சம்பாதிக்கலாம் நஷ்டத்தையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கலாம். சின்ன விஷயம் தப்பாகப் போனாலும் கூட பெரிய இழப்பைச் சந்திக்க வேண்டி இருக்கும். அந்தளவுக்கு ரிஸ்க் அதிகம் இருக்கும் முதலீடுகளாகவே பங்குச்சந்தை பார்க்கப்படுகிறது. ஜுன்ஜுன்வாலா குடும்பத்தினர் நேற்று 30 நிமிடங்களில் மட்டும் 900 கோடி ரூபாய் இழந்துள்ளனர் என்றால் நம்ப முடிகிறதா? இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.

இந்தியாவின் பிரபல முதலீட்டாளரான மறைந்த ராகேஷ் ஜுன்ஜுன்வாலா செய்த மிகவும் வெற்றிகரமான முதலீடுகளில் ஒன்று டாடாவின் டைட்டன் நிறுவனத்தில் முன்கூட்டியே வாங்கியது தான். அவர் டைட்டன் நிறுவனத்தில் சரியான நேரத்தில் முதலீடு செய்ததால் பெரிய லாபத்தைப் பார்க்க முடிந்தது.

ரகேஷ் ஜுன்ஜுன்வாலா மறைந்துவிட்ட போதிலும் இப்போதும் டைட்டன் கம்பெனியின் 5.15% பங்குகள் ரேகா ஜுன்ஜுன்வாலா வசம் இருக்கிறது. டைட்டன் நிறுவனத்தின் ஜூன் காலாண்டு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இருப்பினும், மார்கெட் எதிர்பார்ப்புகளை டைட்டன் முடிவுகள் பூர்த்தி செய்யவில்லை. இதனால் திங்கள்கிழமை தொடக்கம் முதலே டைட்டன் பங்குகள் சரிய ஆரம்பித்தது.

90,000 கோடி ரூபாய்

திங்களன்று ரூ.15,989 கோடியாக மதிப்பிடப்பட்ட ரேகா ஜுன்ஜுன்வாலாவின் பங்கு மதிப்பு வெறும் 30 நிமிடங்களில் கிட்டதட்ட 900 கோடி வரை குறைந்தது. டைட்டன் முடிவுகள் நல்ல முறையில் இருந்திருந்தால் லாபம் அதிகரித்திருக்கும். ஆனால், மார்கெட் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாததால் அதன் பங்கின் மதிப்பு கடுமையாகச் சரிந்துள்ளது. இதுவே ஜுன்ஜுன்வாலாவுக்கு இழப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.

அதேநேரம் இது அவர்கள் பங்குகளின் மதிப்பு எந்தளவுக்குக் குறைந்துள்ளது என்பதை மட்டுமே குறிக்கிறது. இது நிஜமான நஷ்டம் இல்லை. ஜுன்ஜுன்வாலா தரப்பு இப்போது டைட்டன் பங்குகளை விற்றால் மட்டுமே அது உண்மையாகவே நஷ்டமாக இருக்கும். இப்போது அவர்களின் பங்கு மதிப்பு மட்டுமே சரிந்துள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

டைட்டன் நிறுவனத்தைப் பொறுத்தவரை தங்கம் விலை உயர்ந்தாலும் கூட விற்பனையில் பெரிய பாதிப்பு இல்லை. இந்தியாவில் 19 புதிய கடைகளைத் திறந்துள்ளது. டைட்டன் நிறுவனம் தனிஷ்க் நிறுவனத்தின் கீழ் தங்கத்தை விற்பனை செய்து வருகிறது. இதுபோக மியா கேரட்லேன் உள்ளிட்ட நிறுவனங்களின் கீழும் தங்கத்தை விற்பனை செய்கிறது. இதுபோக கடிகாரங்களையும் விற்பனை செய்து வருகிறது. அதன் வாட்ச் பிஸ்னஸ் ஓராண்டில் 23% YoY வளர்ச்சியைப் பதிவு செய்தது. அதேபோல டைட்டன் ஐ பிளஸ் எனப்படும் அவர்களின் கண் கண்ணாடி பிரிவு 12% YoY உயர்ந்தது.

டைட்டனைப் பொறுத்தவரை, சமீபத்திய மாதங்களில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதனால் தனிஷ்க், மியா மற்றும் ஜோயா ஆகியவற்றில் நிறுவனங்களின் விற்பனை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் கடிகார பிஸ்னஸ் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்யும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.