நடிகர் மதன் பாப் உடல் தகனம்

நடிகர் மதன் பாப் உடல் தகனம்
சினிமா குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் மதன் பாப் சென்னையில் காலமானார்

திரைப்பிரபலங்கள் பலர் மதன் பாப் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றனர்.

மதன் பாப்பின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சினிமா குணச்சித்திர மற்றும் நகைச்சுவை நடிகர் மதன் பாப் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 71.

புற்று நோய்க்காக ஏற்கனவே அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை 5 மணி அளவில் அவர் உயிரிழந்தார்.

அவரது உடல் சென்னை அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் குடும்பத்தினர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு, திரைப்பிரபலங்கள் பலர் அவரது உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், இன்று பிற்பகலில் மதன் பாப்பின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், மதன் பாப்பின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் மதன் பாப் உடலுக்கு உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.