பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் 9 பயணிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் 9 பயணிகள் சுட்டுக்கொலை
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் 9 பயணிகள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் அமைந்திருக்கும் ஜோப் மாவட்டத்தில் 9 பயணிகள் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். பலுசிஸ்தானின் தலைநகர் குட்டேவில் இருந்து பஞ்சாப்புக்கு சென்று கொண்டிருந்த இரண்டு பயணிகள் பேருந்தில் இருந்தவர்களை வெளியேற்றி இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.

அந்த மாவட்டத்தின் காவல்துறை துணை ஆணையர் நவீத் அலாம் 9 பயணிகளின் இறப்பை உறுதி செய்தார்.

அடையாளம் தெரியாத நபர்கள் சாலையை மறித்து வியாழக்கிழமை மாலை பேருந்துகளில் பயணம் செய்த நபர்களை பேருந்தில் இருந்து வெளியேற்றி இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பலுசிஸ்தான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஷாகித் ரித் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், "தீவிரவாதிகள் கலாத், மஸ்தங் மற்றும் ஜோப் ஆகிய பகுதிகளில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்," என்று குறிப்பிட்டுள்ளார்.