தங்கம் இருக்கட்டும்.. ரியல் எஸ்டேட் முதலீடு லாபம் தருமா? உண்மையில் எது பெஸ்ட்? 5 நறுக் பாயிண்டுகள்

சென்னை: பல ஆண்டுகளாகச் சொந்தமாக ஒரு வீட்டை வாங்குவது தான் இங்குப் பலருக்கும் பெரிய கனவாக இருந்தது. ஒரு வீடு என்பது பாதுகாப்பு, பெருமை மற்றும் செல்வமாகக் கருதப்பட்டது. ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது, அதேபோல பணம் சம்பாதிக்கும் வழிகளும் மாறிவிட்டன. பணவீக்கம் அதிகரித்துவிட்ட நிலையில், சேமிப்பைப் பாதுகாக்க மக்கள் தங்கத்திலும் கணிசமாக முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்தச் சூழலில் வீடு vs தங்கம் இரண்டில் எது பெஸ்ட் முதலீடு என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தக் காலத்தில் பணவீக்கம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. இதனால் நாம் சரியான விஷயத்தில் முதலீடு செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால் மிகப் பெரிய தொகையைச் சேர்த்து வைத்தாலும் கூட அது பணவீக்கத்தில் கரைந்துவிடும். அப்படிக் கரையாமல் இருக்க நமது முதலீடு சரியானதாக இருக்க வேண்டும். பொதுவாக முதலீடு என வந்தாலே நமக்குத் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் தான் பிரதானமானதாக இருக்கும். இரண்டையும் ஒப்பீட்டு நாம் பார்க்கலாம்.
பொதுவாக, தங்கம் குறுகிய கால இலக்குகளுக்கு ஏற்ற முதலீடாகக் கருதப்படுகிறது. இது பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பாகச் செயல்படுகிறது. அதாவது பணவீக்கம் அதிகரிப்பதைத் தாண்டி தங்கம் விலை அதிகரிக்கும். இதனால் உங்கள் சேமிப்பு நிஜமாகவே சேமிப்பாக இருக்கும். நீங்கள் தங்கத்தில் பல வழிகளில் முதலீடு செய்ய முடியும்.
மறுபுறம், ரியல் எஸ்டேட் நீண்ட காலத்திற்கு ஆதரவை வழங்குகின்றன. ரியல் எஸ்டேட் நீண்ட கால நோக்கில் வாடகை வருமானத்தைக் கணிசமாக வழங்கும். மேலும், சரியான மதிப்பில் வாங்கினால் அதன் மதிப்பும் தொடர்ந்து உயரவே செய்யும். மேலும், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய எளிதாக நமக்கு லோன்களும் கூட கிடைக்கும்.
தங்கத்தை வாங்குவதும் ஈஸி, விற்பதும் ஈஸி.! , ரியல் எஸ்டேட்டுடன் ஒப்பிடும்போது ஈஸியாக பணமாக மாற்றுவதில் தங்கம் தான் கிங்.. குறிப்பாக, டிஜிட்டல் தங்கம் மற்றும் பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள Gold ETFகள் அதிகப் பணப்புழக்கம் கொண்டவை. நினைத்தால் நாம் நிமிடங்களில் விற்றுவிடலாம்.
ரியல் எஸ்டேட்டில் நமக்கு வாடகை வருமானம் இருந்தாலும், அதை விற்று பணமாக்குவது கடினம். ரியல் எஸ்டேட்டை விற்பனை செய்ய அதிக டைம் எடுக்கும். அதிகப் பரிவர்த்தனை செலவுகள் மற்றும் சிக்கல்களும் உள்ளன. பல நேரங்களில் மாதக் கணக்கில் அவ்வளவு ஏன் ஆண்டுக் கணக்கில் கூட சொத்துகளை விற்க முடியாமல் பலரும் சிரமப்பட்டு இருக்கிறார்
தங்கம் சிறிய தொகைகளில் இருந்தும் கூட முதலீடு செய்யலாம். டிஜிட்டல் கோல்ட்களில் ரூ.100 முதலே தங்கத்தை வாங்கலாம். அதேபோல பங்குச்சந்தைகளில் இருக்கும் கோல்ட் Gold ETFகளில் அதற்குக் குறைவாகக் கூட தங்கத்தை கூட வாங்க முடியும். இதனால் இது சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக உள்ளது. மறுபுறம், வீட்டுக் கடன்களுக்குத் தொடக்க முதலீடு, அதாவது டவுன் பேமேண்ட் அதிகம் தேவைப்படும். இதுபோக இஎம்ஐ, பதிவுக் கட்டணம் என ஏகப்பட்ட செலவுகள் வந்து கொண்டே இருக்கும்.அடுத்து தங்கம் வாங்கும் போது நாம் ஏமாறுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.. இப்போது 916, ஹால்மார்க், HUID குறியீட்டு எண் என ஏகப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் வந்துவிட்டன. நாம் ஒரு நிமிடம் அதை செக் செய்தாலேயே ஏமாற மாட்டோம். மேலும், கேரட்டோமீட்டர் இருந்தாலே போதும் தங்கம் எந்தளவுக்குத் தூய்மையானது என்பதையும் நாம் ஈஸியாக அளவிடலாம்.
லாபம் எதில் அதிகம்
அடுத்து விஷயத்திற்கு வருவோம் அதன் மதிப்பு அதிகரிப்பது. இது குறித்து தகவல்களைப் பிரபல ஆங்கில ஊடகமான பைனாஷியல் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதன் 1, 3, 5, 10, 15, 20 ஆண்டுகளில் தங்கமும் ரியல் எஸ்டேட்டும் எந்தளவுக்கு லாபம் கொடுத்துள்ளது என்பதை ஒப்பிட்டுள்ளனர். நேஷ்னல் ஹவுசிங் பேங்க் என்பதில் இருந்து ரியல் எஸ்டேட் லாபம் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்க்கும்போது தங்கம் ஓராண்டில் 43.1% லாபம் கொடுத்துள்ளது. ரியஎல் எஸ்டேட் 7.4% மட்டுமே கொடுத்துள்ளது. 3 ஆண்டுகளில் பார்க்கும் போது தங்கம் 25.3% லாபம் கொடுத்துள்ள நிலையில், ரியல் எஸ்டேட் 6.9% மட்டுமே கொடுத்துள்ளது
ஆண்டுகளில் தங்கம் விலை 16.4% லாபம் தந்துள்ள நிலையில், ரியல் எஸ்டேட் 5.7% மட்டும் கொடுத்துள்ளது. அடுத்து 10 ஆண்டுகளிலும் கூட தங்கம் 14% சராசரி லாபத்தைக் கொடுத்துள்ளது. ரியல் எஸ்டேட் 5.2% மட்டுமே கொடுத்துள்ளது. 15 ஆண்டுகளில் தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட் முறையே 11.3% மற்றும் 6.4% லாபம் கொடுத்துள்ளது. கடைசியாக 20 ஆண்டுகளில் தங்கம் 14.7% லாபம் கொடுத்துள்ள நிலையில், ரியல் எஸ்டேட் 7.7% மட்டுமே கொடுத்துள்ளது.
ஒப்பீட்டளவில் பார்க்கும் போது குறுகிய காலத்திற்குத் தங்கமே ஏற்றதாக இருக்கிறது. மேலும், அதைப் பணமாக மாற்றுவதும் ஈஸி. அதேநேரம் மிக நீண்ட காலம் தலைமுறை கடந்தும் என வந்தால் அங்கு ரியல் எஸ்டேட் நல்ல லாபத்தைத் தருவதாகவே இருக்கிறது. இதில் வாடகை வருமானமும் கிடைக்கும். அனைத்தையும் தாண்டி வீடு என்பது இந்தியாவில் ஒரு எமோஷனாகவே இருந்து வருகிறது.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீட்டு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு சார்ந்த முடிவுகளை எடுக்கும் முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.